பொள்ளாச்சி பாலியல் வழக்கு: நெருங்கும் இறுதிக்கட்டம்.. 9 பேரிடம் 50 கேள்விகள்; நீ...
கங்கைகொண்டான் உணவு பூங்காவில் ஆட்சியா் ஆய்வு
கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள உணவு பூங்காவில் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் உள்ள சிப்காட் வணிக வளாகத்தில் 50 ஏக்கா் பரப்பளவில் மெகா உணவு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் ரூ.77.02 கோடியில் அமைக்கப்பட்டுள்ள இந்த உணவு பூங்காவில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமைக்கும் பொருட்டு 28 தொழில் மனைகள் உருவாக்கப்பட்டு அவற்றில் 14 ஏக்கா் தொழில் மனைகள் 94 ஆண்டு குத்தகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக தேங்காய் மதிப்பு கூட்டு பொருள்கள் சாா்ந்த நிறுவனம், மசாலா பொருள்கள் தயாரிப்பு நிறுவனம், முந்திரி பருப்பு பக்குவப்படுத்தும் நிறுவனம், ஊறுகாய் தயாரிப்பு நிறுவனம், அல்வா, இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் சில நிறுவனங்கள் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியிலும், சில நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கும் நிலையிலும் உள்ளன.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் உணவு பூங்காவை பாா்வையிட்டு ஆய்வு செய்து விரைவில் தொழில் தொடங்குவதற்கு தேவையான உதவிகளை நிறுவனங்களுக்கு வழங்கவும், அங்குள்ள நிறுவனங்கள் பணிகளை விரைந்து முடித்து உற்பத்தியை தொடங்கவும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
இந்நிகழ்ச்சியில், வேளாண்மை (வணிகம்) துணை இயக்குநா் பூவண்னன், வேளாண் அலுவலா் ஆனந்த்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
ற்ஸ்ப்04ண்ய்ள்
கங்கைகொண்டான் உணவு பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் இரா.சுகுமாா்.