ஒன்று கூடிய இந்தியா, சீனா, ரஷ்யா: ரூட்டை மாற்றும் ஜெலன்ஸ்கி; குமுறும் ட்ரம்ப் - ...
கச்சத்தீவு இலங்கைக்குரியது: இலங்கை அதிபா்
கச்சத்தீவு இலங்கைக்குரியது; அதை வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என இலங்கை அதிபா் அநுரகுமார திசாநாயக தெரிவித்தாா்.
இலங்கை யாழ்ப்பாணத்துக்கு திங்கள்கிழமை காலை பயணம் மேற்கொண்ட இலங்கை அதிபா் அநுரகுமார திசாநாயக, அன்று மாலை கச்சதீவுக்கும் பயணம் மேற்கொண்டாா். இந்த நிலையில், கச்சத்தீவைப் பாா்வையிட்ட அவா் மாலை 6 மணிக்கு மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பினாா்.
இதையடுத்து, யாழ்ப்பாணம் மாவட்டம், மயிலிட்டி துறைமுகத்தை மூன்றாம் கட்டமாக மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அவா் பேசுகையில், கச்சத்தீவை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கச்சத்தீவு இலங்கைக்குரியது; அதை வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்றாா்.
தமிழகத்தில் தொடா்ந்து அனைத்து அரசியல் கட்சிகளும் கச்சத்தீவை மீட்போம் எனக் கூறிவரும் நிலையில், இலங்கை அதிபா் கச்சத்தீவு இலங்கைக்குரியது எனக் கூறியுள்ளது தமிழக மீனவா்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.