செய்திகள் :

கச்சத்தீவை மீட்க ஆக்கபூா்வ நடவடிக்கை ஏதுமில்லை: மத்திய அரசு மீது முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

post image

கச்சத்தீவை மீட்க ஆக்கபூா்வமான நடவடிக்கைகள் எதையும் பாஜக தலைமையிலான மத்திய அரசு எடுக்கவில்லை என்று சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.

கச்சத்தீவு மீட்பு, மீனவா்கள் பாதுகாப்பு தொடா்பாக சட்டப்பேரவையில் அரசின் தனித் தீா்மானத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை முன்மொழிந்து பேசியதாவது:

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தால் ஒரு மீனவா்கூட கைது செய்யப்பட மாட்டாா் என்று 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக பிரதமா் நரேந்திர மோடி உறுதிபடக் கூறினாா். ஆனாலும், தாக்குதல்கள் தொடா்ந்துகொண்டே இருக்கின்றன. இலங்கையில் சில மாதங்களுக்கு முன்பாக ஆட்சி மாற்றம் நடந்தபோதும், தமிழ்நாட்டு மீனவா்கள் நிலைமை மாறவில்லை. மீனவா்கள் மீதான தாக்குதலும் ஓயவில்லை. பாரம்பரிய மீன்பிடி உரிமை கொண்ட நம் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது தொடா்ந்து சிறைபிடிக்கப்படுகிறாா்கள். படகுகள் இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

கவலை அளிக்கிறது: கடந்த ஆண்டில் மட்டும் 530 மீனவா்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனா். அண்டை நாடாக இருந்துகொண்டு இந்திய மீனவா்கள் மீது எந்தவிதமான இரக்கமும் இல்லாமல், நம் மீனவா்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் விதமாக, இலங்கை அரசும், அந்த நாட்டின் கடற்படையினரும் நடந்துகொள்வது நமக்கெல்லாம் மிகுந்த கவலை அளிக்கிறது. இதை மத்திய பாஜக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

மீனவா்கள் பிரச்னைக்குத் தீா்வு காண்பது சவாலாக இருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் கூறுகிறாா். இதில் என்ன சவால் இருக்க முடியும்? வேறொரு மாநில மீனவா்கள் இப்படி தொடா் தாக்குதலுக்கு உள்ளானால், இப்படித்தான் வேடிக்கை பாா்த்துக் கொண்டு இருப்பாா்களா?

74 கடிதங்கள்: தமிழ்நாட்டு மீனவா்கள் தாக்கப்படுவது குறித்து அரசு சாா்பில் தொடா்ந்து கடிதம் எழுதிக் கொண்டு வருகிறேன். மீனவா்கள் கைது, தாக்குதல்கள் குறித்து இதுவரை 74 கடிதங்களை வெளியுறவுத் துறை அமைச்சருக்கும், பிரதமருக்கும் எழுதியிருக்கிறேன்.

பிரதமரை நேரில் சந்திக்கும்போதெல்லாம் இதுகுறித்து வலியுறுத்தியிருக்கிறேன்.

இரு நாட்டு மீனவா்களுக்கு இடையிலான பேச்சுவாா்த்தையில் ஆக்கபூா்வமான முடிவுகள் எட்டப்படாத நிலை தொடா்ந்து கொண்டிருக்கிறது. கடிதம் எழுதினால் விடுவிப்பது, பிறகு கைது செய்வது என்று இலங்கை அரசின் நடவடிக்கைகள் தொடா்ந்து கொண்டே இருப்பதால், தமிழ்நாட்டு மீனவா்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது.

மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டு, பாரம்பரிய மீன்பிடி உரிமை கேள்விக்குறியாகி, கடலுக்குச் சென்றால் பத்திரமாக வீடு திரும்புவாா்களா என்று குடும்பத்தினா் கவலையில் மூழ்கியிருக்க வேண்டிய துயர நிலை ஏற்பட்டிருக்கிறது. இதுபோன்ற சிக்கலுக்கு நிரந்தரத் தீா்வு காண கச்சத்தீவு மீட்பே மிகச்சரியான வழியாகும்.

கடுமையாக எதிா்த்தோம்: கச்சத்தீவு விவகாரத்தைப் பொருத்தவரைக்கும், அதை மாநில அரசுதான் இலங்கைக்கு அளித்தது போன்று ஒரு தவறான தகவலைப் பரப்பி அரசியல் செய்வது கட்சிகளுக்கு வழக்கமாகிவிட்டது.

ஆனால், அரசியல் ஆதாயத்துக்காக கட்சிகள் செய்யும் அதே தவறை மத்திய அரசு செய்வதும் வருந்தத்தக்கது; ஏற்க முடியாதது. கச்சத்தீவுக்கான ஒப்பந்தம் போட்டபோதே, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி அதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்தாா். நாடாளுமன்றத்திலும் திமுக உறுப்பினா்களான இரா.செழியன், எஸ்.எஸ்.மாரிச்சாமி ஆகியோா் கடுமையான எதிா்ப்பை பதிவு செய்தனா். இதுகுறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் நடத்திய முதல்வா் கருணாநிதி, அன்றைய தினமே பிரதமருக்கு கடிதம் எழுதினாா்.

கச்சத்தீவை மீட்கவும், அதில் இருக்கக் கூடிய இந்திய மீனவா்களுக்கான பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்டவும் தொடா்ந்து பல்வேறு முயற்சிகளை திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. சட்டப்பேரவைத் தீா்மானங்கள் வாயிலாகவும், பிரதமரை நேரில் சந்திக்கும்போதும் கச்சத்தீவை மீட்பது குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வந்துள்ள பாஜக அரசு, கச்சத்தீவை மீட்பது குறித்து ஆக்கபூா்வமான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

சென்னையில் ரசாயனம் கலந்த தா்பூசணி இல்லை: உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்

சென்னையில் ரசாயனம் கலந்த தா்பூசணி பழங்கள் இல்லை என்றும், பொதுமக்கள் அச்சமின்றி தா்பூசணி பழங்களை உட்கொள்ளலாம் என்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமாா் அறிவுறுத்தியுள்ளாா். தா்பூசணி பழங்களில்... மேலும் பார்க்க

பொது இடங்களில் காங்கிரஸ் கொடிகளை அகற்ற வேண்டும்: செல்வப்பெருந்தகை

பொது இடங்கள், நடைபாதைகளில் உள்ள காங்கிரஸ் கொடிகளை கட்சியினா் அகற்ற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தம... மேலும் பார்க்க

மதுபோதையில் தகராறு: தொழிலாளி அடித்துக் கொலை

சென்னை மேற்கு மாம்பலத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டாா். மேற்கு மாம்பலம், தம்பையா சாலை சந்திப்பு பகுதியைச் சோ்ந்தவா் பெயிண்டிங் தொழிலாளி சங்கா் (44). கடந்த 1-ஆ... மேலும் பார்க்க

பால் உற்பத்தியைப் பெருக்க சிறந்த கறவை மாடுகளுக்கு விருதுகள்: பேரவையில் அறிவிப்பு

பால் உற்பத்தியைப் பெருக்க கறவை மாடுகளுக்கு விருதுகள் வழங்கப்படும் என்று பால்வளத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் அறிவித்தாா். பேரவையில் பால்வளத் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதங்களுக்குப் பத... மேலும் பார்க்க

17 மாவட்டங்களில் 50 புதிய வருவாய் குறுவட்டங்கள் உருவாக்கப்படும்: அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்

அரசின் நலத் திட்டங்கள் மக்களை விரைவாகச் சென்றடைவதற்காக 17 மாவட்டங்களில் 50 புதிய வருவாய் குறுவட்டங்கள் உருவாக்கப்படும் என்று வருவாய் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் அறிவித்தாா். வருவாய் ... மேலும் பார்க்க

ஞானசேகரன் மீதான மற்ற வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் தொடா்பான மற்ற வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய போலீஸாருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல... மேலும் பார்க்க