பாக்கியலட்சுமி சீரியல் வெற்றிக் கொண்டாட்டம்! ஒன்றுகூடிய நடிகர்கள்!
கஜகஸ்தான் ராணுவத்தில் புதியதாக செய்யறிவு பிரிவு உருவாக்கம்!
கஜகஸ்தான் ராணுவப் படைகளை நவீனமாக்க, புதியதாகச் சிறப்பு செயற்கை நுண்ணரிவு பிரிவு உருவாக்கப்படுவதாக, அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கஜகஸ்தான் ராணுவத்தின் ஆயுதப் படைகளின் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுப்படுத்துவதற்காக, ஒரு சிறப்பு செயற்கை நுண்ணரிவு (ஏஐ) பிரிவை, அந்நாட்டு அரசு உருவாக்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கஜகஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சகம், நேற்று (ஆக.18) வெளியிட்ட அறிக்கையில், போர் சூழ்நிலைகளில் பெரிய தரவு பகுப்பாய்வு, தானியங்கி கட்டளை அமைப்புகள், செயல்பாட்டு மாடலிங் மற்றும் நிகழ்நேர முடிவெடுப்பதற்கான செய்யறிவு தீர்வுகளை இந்தப் புதிய பிரிவு உருவாக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், அந்த அறிக்கையில் கூறப்பட்டதாவது:
“கஜகஸ்தான் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியின் அறிவுறுத்தல்களின்படி, செய்யறிவு தொழில்நுட்பங்களை உருவாக்கி செயல்படுத்துவதற்காகத் தனி பிரிவு ஒன்று நிறுவப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பிரிவு, உள்நாட்டு மற்றும் பன்னாட்டு ஆய்வு மையங்கள், பல்கலைக்கழகங்கள் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து பாதுகாப்பு அமைப்புகளினுள் ஒருங்கிணைக்கச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கஜகஸ்தான் பாதுகாப்புத் துறையின் துணை அமைச்சர் தார்கன் அக்மெதியேவ், அந்நாட்டின் அபாய் மற்றும் அயாகோஸ் ராணுவத் தளங்களை நேரில் ஆய்வு செய்தார்.
இதையும் படிக்க: பயணிகள் விமானத்தில் தீ! 36,000 அடி, 40 நிமிட பயணம்! பத்திரமாக தரையிறக்கியது எப்படி?