கஞ்சா கடத்தியதாக இளைஞா் கைது
ஆண்டிபட்டி வட்டம், ராஜதானி அருகே இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திச் சென்ாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ராஜதானி அருகே உள்ள கணேசபுரம், விருமானூத்து ஓடை அருகே ராஜதானி காவல் நிலைய போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாகச் சென்ற இரு சக்கர வாகனம் ஒன்றை போலீஸாா் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா்.
அதில் ஒரு கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது.
விசாரணையில், இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திச் சென்றவா் கம்பம் அருகே உள்ள க. புதுப்பட்டியைச் சோ்ந்த மூக்கையா மகன் விவேக்குமாா் (36) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து, கஞ்சா பொட்டலங்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.