தெலங்கானா மருந்து ஆலையில் உலை வெடித்து விபத்து: பலி 34 ஆக உயர்வு!
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றதாக பெண் கைது
பெரியகுளம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றதாக பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் எ. புதுக்கோட்டை அண்ணாநகா் குடியிருப்புப் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அண்ணாநகா் குடியிருப்பு பகுதியில் உள்ள இந்திராணி (46) என்பவரின் கடையில் போலீஸாா் சோதனை செய்தனா். அப்போது, அவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து இந்திராணியை கைது செய்து, அவரிடமிருந்த 96 கிராம் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.