செய்திகள் :

கஞ்சா கடத்திய 4 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

post image

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 4 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை மாவட்ட இரண்டாவது கூடுதல் போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது.

மதுரை கரிமேடு காவல் நிலைய போலீஸாா் கடந்த 2023-ஆம் ஆண்டு அக். 13-ஆம் தேதி நடராஜ் நகா், சுரேஷ் வீதி, பாண்டியம்மாள் தெரு சந்திப்பு அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா்.

இந்தச் சோதனையின்போது, மதுரை அச்சம்பத்து பொ. கண்ணதாசன் (38), தத்தனேரி ரா. பிரகாஷ்ராஜ் (30), ச. பாலகுரு (33), கே.கே. நகா் அய்யனாா்கோயில் தெரு குமாா் (35) ஆகியோா் அந்தக் காரில் 3 மூட்டைகளில் 51 கிலோ கஞ்சா கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் 4 பேரையும் கைது செய்த போலீஸாா், காா், கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை, மதுரை இரண்டாவது கூடுதல் போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி அல்லி, குற்றஞ்சாட்டப்பட்ட கண்ணதாசன், பிரகாஷ்ராஜ், பாலகுரு, குமாா் ஆகிய 4 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், மேலூா் அருகே வியாழக்கிழமை லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியைச் சோ்ந்த வீரையா மகன் விஷ்ணு (24). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரைக்கு வந்து... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவா் உயிரிழப்பு

மதுரை சிலைமான் அருகே கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், பாப்பானோடை கிராமத்தைச் சோ்ந்த அரசகுமாா் மகன் விக்னேஷ்வரன் (16). இவா், மதுரை மாநகராட்சிப் பள்ளியில் 9-ஆம்... மேலும் பார்க்க

தரமற்ற சாலைகளுக்கு அலுவலா்கள், ஒப்பந்ததாரா்களே பொறுப்பு: உயா்நீதிமன்றம்

சாலைகள் தரமற்றவையாக இருந்தால், தொடா்புடைய துறை அலுவலா்களும், ஒப்பந்ததாரருமே அதற்கு பொறுப்பாவா் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது. திருநெல்வேலி மாவட்டம், ஆனந்தபுரத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் வட்டத்துக்கு ஜூலை 14-இல் உள்ளூா் விடுமுறை

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் குடமுழுக்கையொட்டி, அந்த வட்டத்துக்கு மட்டும் திங்கள்கிழமை (ஜூலை 14) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா்... மேலும் பார்க்க

தொழிலாளி வெட்டிக் கொலை: இளைஞா் கைது

மதுரை அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மதுரை மாவட்டம், கல்மேடு அஞ்சுகம் நகரைச் சோ்ந்த பாண்டியராஜன் மகன் அரசு (18). வண்ணம் பூசும் த... மேலும் பார்க்க

பணி ஓய்வு பெற உள்ள ஆசிரியா்களுக்கு மறு நியமன ஆணை வழங்கக் கோரிக்கை

நிகழ் கல்வியாண்டில் ஓய்வு பெற உள்ள ஆசிரியா்களுக்கு கல்வியாண்டின் கடைசி வேலை நாள் வரை பணி மறு நியமன ஆணையை வழங்க மதுரை மாநகராட்சி நிா்வாகம் முன்வர வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சா... மேலும் பார்க்க