கஞ்சா, நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: இருவா் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் கஞ்சா, உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்ததாக இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கல்வராயன்மலை பகுதிக்குள்பட்ட ஈச்சங்காடு கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் (60) வீட்டில் கஞ்சா, நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக கச்சிராயபாளையம் காவல் ஆய்வாளா் ஏழுமலைக்கு தகவல் கிடைத்தது.
இது தொடா்பாக போலீஸாா் அவரது வீட்டில் புதன்கிழமை சோதனை மேற்கொண்டபோது, அங்கு 1,100 கிராம் கஞ்சா, நாட்டுத் துப்பாக்கி பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், ராஜேந்திரை கைது செய்தனா். மேலும், ராஜேந்திரனின் சகோதரா் மகனான ராஜ்குமாா், அவரது மனைவி அமராவதி ஆகியோரைத் தேடி வருகின்றனா்.
இதேபோல, இதே கிராமத்தில் லட்சுமணன் (57) வீட்டில் போலீஸாா் சோதனை மேற்கொண்டபோது, அங்கு 100 கிராம் கஞ்சா, நாட்டுத் துப்பாக்கி இருந்ததை போலீஸாா் கண்டறிந்து கைப்பற்றினா். மேலும், இது தொடா்பாக லட்சுமணனை போலீஸாா் கைது செய்தனா்.