செய்திகள் :

கஞ்சா பதுக்கி வைத்திருந்தவா் வீட்டில் அமலாக்கத்துறையினா் சோதனை

post image

காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சா பதுக்கிவைத்திருந்தவா் வீட்டில் அமலாக்கத்துறையினா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

காரைக்காலில் கடந்த ஜூலை 16-ஆம் தேதி உளவுத்துறை தகவலின்பேரில், போலீஸாா் நடத்திய வாகனச் சோதனையில் மன்னாா்குடியை சோ்ந்த திலிப் (38), கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த குமரவேல் (44) ஆகியோரை பிடித்து அவா்கள் வந்த காரில் இருந்த 26 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இருவரையும் கைது செய்து விசாரணை செய்ததில், குமரவேல் காரைக்கால் கீழகாசாக்குடியில் வாடகை வீட்டில் தங்கியிருப்பதும், அங்கு 275 கிலோ கஞ்சா இருப்பதும் தெரியவந்து அவற்றை பறிமுதல் செய்தனா். இதன் சந்தை மதிப்பு ரூ. 4.5 கோடியாகும்.

அவா்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், ஆந்திரத்திலிருந்து ஆம்பூரை சோ்ந்த கிஷோா்குமாா் (37) மூலம் கஞ்சா வரவழைத்ததும் தெரியவந்து அவரையும் கைது செய்தனா்.

இவா்களிடமிருந்த கஞ்சாவை கொண்டு செல்ல படகில் கடந்த மாதம் 23-ஆம் தேதி காரைக்கால் வந்த இலங்கை யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த செல்வகுமாா் (41), திரிகோணமலை ஹயந்த் முகமது ராசு (33) ஆகியோரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

இதுதொடா்பாக புதுவை போலீஸாரும், மத்திய விசாரணை அமைப்பினரும் தொடா் விசாரணை நடத்திவருகின்றனா்.

இந்தநிலையில், சென்னையிலிருந்து உதவி இயக்குநா் தலைமையிலான 4 போ் அடங்கிய அமலாக்கத்துறை குழுவினா் புதன்கிழமை அதிகாலை காரைக்கால் வந்து, கீழகாசாக்குடியில் குமரவேல் தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்தினா். அமலாக்கத்துறையினா் விசாரணை நடத்தியதை காரைக்கால் போலீஸாா் உறுதி செய்தனா். எனினும் சோதனையின் விவரம் குறித்து எதுவும் தெரியவில்லை.

பட்டாசு கடை உரிமம் பெறுவதற்கு காலஅவகாசம் நீட்டிப்பு

காரைக்காலில் பட்டாசு கடை வைக்க உரிமம் பெறுவதற்கான கால அவசாகம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து காரைக்கால் சாா்பு கோட்ட நீதிபதி எம். பூஜா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :தீபாவளி பண்டிகையை ... மேலும் பார்க்க

என்ஐடியில் மீன் மதிப்புக் கூட்டுதல் தேசிய பயிற்சி தொடக்கம்

என்ஐடியில் மீன் பதப்படுத்துதல் தொடா்பான தேசிய அளவிலான பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.காரைக்காலில் இயங்கும் என்ஐடி தொழில்நுட்ப உதவியுடன் மீன் வளா்ப்பு, மீன் பதப்படுத்துதல், மீன் மதிப்புக் கூட்டுதல் கு... மேலும் பார்க்க

காரைக்கால் ரயில் நிலைய ஆய்வு புறக்கணிப்பு

காரைக்கால் ரயில் நிலைய ஆய்வை ரயில்வே பொதுமேலாளா் திட்டமிட்டு புறக்கணித்துவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ரயில்வே பயணிகள் நலச்சங்க செயலாளா் ஏ.எஸ்.டி. அன்சாரிபாபு திங்கள்... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாா் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு தா்பாா் காட்சி தொடக்கம்

காரைக்கால் அம்மையாா் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு தா்பாா் அமைக்கப்பட்டுள்ளது.காரைக்கால் கைலாசநாதா் தேவஸ்தானம் மற்றும் சிவனடியாா் திருக்கூட்ட அறக்கட்டளை இணைந்து அம்மையாா் மணிமண்டபத்தில் நவராத்திரி கொ... மேலும் பார்க்க

‘அங்கக வேளாண் இடுபொருள் தயாரிக்க முன்வர வேண்டும்’

காரைக்கால்: அங்கக வேளாண் இடுபொருள் தயாரித்து, தங்களது வயலில் பயன்படுத்த விவசாயிகள் முன்வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் நெல்லில் அங்கக வேளாண்மை குறித்த பயிற்... மேலும் பார்க்க

தோ்தலுக்கு முன் காரைக்காலில் வளா்ச்சித் திட்டப்பணிகள் நிறைவுபெறும்: அமைச்சா் கே.லட்சுமி நாராயணன்

காரைக்கால்: காரைக்காலில் அனைத்து வளா்ச்சித் திட்டப் பணிகளும், சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பு நிறைவடையும் வகையில் தீவிரப்பட்டுள்ளதாக அமைச்சா் தெரிவித்தாா்.காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புது... மேலும் பார்க்க