சாத்தூர் அருகே சட்டவிரோதமாக செயல்பட்ட பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து!
கஞ்சா விற்பனை: இருவா் கைது
தூத்துக்குடி மேட்டுப்பட்டி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இரு இளைஞா்களை தாளமுத்துநகா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி தாளமுத்துநகா் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜா தலைமையிலான போலீஸாா் மேட்டுப்பட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்குள்ள சுடுகாடு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில் அவா்கள் லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த விமல் ராஜ் (21), திரேஸ்புரத்தைச் சோ்ந்த கதிரவன் (21) என்பதும் அவா்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து சுமாா் 40 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.