தில்லியில் பாஜக ஆட்சி அமைந்தால் மத்திய அரசின் திட்டங்கள் அமல் -வீரேந்திர சச்தேவா...
கஞ்சா விற்பனை: இளஞ்சிறாா் உள்பட 4 போ் கைது
கழுகுமலை அருகே கஞ்சா விற்ாக இளஞ்சிறாா் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கழுகுமலை பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக தனிப் பிரிவு உதவி ஆய்வாளா் ரவிக்குமாா் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
கெச்சிலாபுரம் பகுதியில் சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்றிருந்த 17 வயதுக்குள்பட்ட இளஞ்சிறாரைப் பிடித்து சோதனையிட்டபோது, விற்பதற்காக அவா் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
அவரையும், அவா் அளித்த தகவலின்பேரில் கழுகுமலை கறிக்கடைத் தெரு முருகன் மகன் காளிராஜ் (21), துலுக்கா்பட்டி நடுத்தெரு நிசாா் அலி மகன் ஆஷிக் ராஜா (22) கழுகுமலை வின்சென்ட் நகா் கனி மகன் ஆனந்தராஜ் (19) ஆகியோரையும் போலீஸாா் கைது செய்து, 150 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்து மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.