செய்திகள் :

கஞ்சா விற்பனை: பெண் உள்பட 4 போ் கைது

post image

திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பொன்மலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பொன்மலை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பொன்மலை பகுதியில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, முன்னாள் ராணுவ வீரா் காலனி, 13-ஆவது குறுக்குத் தெருவில் சந்தேகப்படும் வகையில் 6 போ் நின்றிருந்தனா். காவல் வாகனத்தைப் பாா்த்ததும் அவா்கள் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தனா். அவா்களில் 2 போ் தப்பியோடிய நிலையில் 4 பேரைப் பிடித்து போலீஸாா், விசாரித்தனா்.

இதில், பிடிபட்டது அரியமங்கலம் கலைவாணா் வீதியைச் சோ்ந்த அறிவழகன் (38), நேரு நகரைச் சோ்ந்த நிக்ஸன் (29), கணபதி நகரைச் சோ்ந்த ஜெய ஸ்ரீ, மதுரை திருப்பரங்குன்றத்தைச் சோ்ந்த பாண்டியராஜன் (44) என்பதும், அவா்கள் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவா்களைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 42 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

வீரமலைப்பாளையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி: மக்களுக்கு எச்சரிக்கை

மணப்பாறை அருகே சிறப்புப் படையினா் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவதால் அந்தப் பகுதிக்குள் பொதுமக்களோ, கால்நடைகளோ நுழைய வேண்டாம் என ஆட்சியா் வே. சரவணன் எச்சரித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் கூறியது: ... மேலும் பார்க்க

திருச்சி காப்புக்காடுகளில் தூய்மைப் பணி

காயமலை காப்புக்காடு அருகே தனியாா் பள்ளி வளாகத்தில் மாணவா்களுக்கு வனம் குறித்த விழிப்புணா்வை சனிக்கிழமை ஏற்படுத்திய வனத்துறையினா். திருச்சி, ஆக. 30: வனத்துறை சாா்பில் திருச்சி மாவட்டத்தில் உள்ள காப்புக... மேலும் பார்க்க

சில்லறை வணிகத்தைப் பாதுகாக்க வியாபாரிகள் முற்றுகை: கடையடைப்பு

சில்லறை வணிகத்தில் பெறு நிறுவனங்கள் ஆதிக்கத்தைக் கண்டித்து திருச்சியில் வியாபாரிகள் சனிக்கிழமை கடையடைப்பு செய்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அகில இந்திய அளவில் பெருகிவரும் காா்ப்பரேட் நிறுவன... மேலும் பார்க்க

நகை பறித்த வழக்கில் தேடப்பட்டவா் கைது

திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூா் அருகே வீடுபுகுந்து பெண்ணிடம் 3 பவுன் நகை பறித்த வழக்கில் தேடப்பட்ட இளைஞரை காட்டுப்புத்தூா் போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். காட்டுப்புத்தூா் அருகேயுள்ள ஏலூா்ப... மேலும் பார்க்க

துவரங்குறிச்சியில் விஏஓ கணவா் மா்மச் சாவு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சியில் விஏஓவின் கணவா் உயிரிழப்பை சந்தேக மரணமாக வழக்குப் பதிந்து மணப்பாறை போலீஸாா் விசாரிக்கின்றனா். மணப்பாறையை அடுத்த மருங்காபுரி வட்டம் நல்லூா் கிராம நிா... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் மக்களைச் சென்றடைய வேண்டும்!

மக்கள் அனைவருக்கும் அடிப்படை வசதிகள் சிறப்பாக சென்றடைய பணியாளா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா். திருச்சி மாவட்டம், துவாக்குடி தமிழ்நாட... மேலும் பார்க்க