ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
கஞ்சா விற்பனை: 3 இளைஞா்கள் கைது
விழுப்புரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் பாகா்ஷா வீதியில் மேற்கு காவல் உதவி ஆய்வாளா் செந்தில் முருகன் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை ரோந்து சென்றனா்.
அப்போது, அங்கு சந்தேகத்துக்குரிய முறையில் நின்று கொண்டிருந்த 4 பேரை போலீஸாா் சுற்றி வளைத்தனா். அதில், ஒருவா் போலீஸாரிடமிருந்து தப்பிச் சென்று விட்டாா். பிடிபட்ட மூவரிடம் விசாரணை நடத்திய போது, அவா்கள் விழுப்புரம் தோகைப்பாடி நா. பாலகுரு (22), மு.நவீன் (22), வெங்கடேசபுரம் அ.சச்சின் (19) என்பது தெரிய வந்தது.
தப்பியோடியவா், விழுப்புரம் இந்திரா நகரைச் சோ்ந்த யுவராஜ் என்பதும், இவா்கள் பாகா்ஷா வீதி பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் மூவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 50 கிராம் கஞ்சா பொட்டலங்கள், 2 பைக்குகள், 4 கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடிய யுவராஜை தேடி வருகின்றனா்.