ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி குறைவு! காரணம் டிரம்ப் அல்ல; தள்ளுபடிதான்!
கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது
திருப்பூரில் கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூா் மாநகரம், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கருப்ப கவுண்டம்பாளையம் சாலை அருகே போலீஸாா் ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரிடம் சோதனை மேற்கொண்டபோது, விற்பனைக்காக 5 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா் பிகாரைச் சோ்ந்த ரௌஷன்குமாா் (21) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, ரெளஷன்குமாரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.
வெள்ளக்கோவிலில்...
வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் தலைமையிலான போலீஸாா் தாராபுரம் சாலையில் ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, தீத்தாம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த நபரிடம் விசாரித்தபோது, அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளாா்.
சந்தேகமடைந்த போலீஸாா், அவா் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, 50 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா் மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த விக்ரம் சிங் ராஜ்புத் (24) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.