செய்திகள் :

கடத்தப்பட்ட லாரி கிளீனர்; டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் பூஜா வீட்டில் மீட்ட போலீஸ்... என்ன நடந்தது?

post image

மும்பை அருகில் உள்ள நவிமும்பை ரபாலே என்ற இடத்தில் சிமெண்ட் மிக்‌ஷர் லாரி ஒன்று மேம்பாலத்தில் சென்றபோது அந்த வழியாக வந்த கார் மீது லேசாக உரசிச்சென்றது. இதனால் கார் டிரைவருக்கும், சிமெண்ட் மிக்‌ஷரில் இருந்த டிரைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கார் டிரைவர் சிமெண்ட் மிக்‌ஷர் லாரி கிளீனர் குமாரை தன்னுடன் போலீஸ் நிலையம் வரும்படி கேட்டுக்கொண்டார். கிளீனர் குமாரும் அவருடன் சென்றார். அவரை கட்டாயப்படுத்தி காரில் இருந்தவர்கள் அழைத்து சென்றனர். ஆனால் அதன் பிறகு குமாரை லாரி டிரைவர் சந்த்குமாரால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதையடுத்து சந்த்குமார் இது குறித்து சிமெண்ட் மிக்‌ஷர் லாரி உரிமையாளர் விலாஸிடம் தெரிவித்தார். விலாஸும், சந்த்குமாரும் சேர்ந்து லாரி கிளீனரை பல இடங்களில் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.

இதையடுத்து விலாஸ் இது குறித்து போலீஸில் புகார் செய்தார். போலீஸார் உடனே லாரி கிளீனர் குமாரை தேட ஆரம்பித்தனர். லாரி லேசாக உரசிய கார் நம்பரை பார்த்து அது யாருக்கு சொந்தமானது என்பதை கண்டுபிடித்தனர். அக்கார் பூஜா ஆட்டோமொபைல்ஸ் என்ற பெயரில் பதிவாகி இருந்தது.

இதையடுத்து அக்கம்பெனியின் முகவரியை தேடி போலீஸார் சென்றனர். அம்முகவரி புனேயில் இருந்தது. அது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு டிஸ்மிஸ் செய்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி பூஜா கேட்கர் வீடு என்று தெரிய வந்தது. போலீஸார் அங்கு சென்றபோது பூஜாவின் தாயார் மனோரமா வீட்டு கதவை திறக்க மறுத்தார். போலீஸார் நீண்ட நேரம் போராடிய பிறகு மனோரமா கதவை திறந்தார். உள்ளே சோதனை செய்து பார்த்தபோது லாரி கிளீனர் குமாரை உள்ளே அடைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரை போலீஸார் மீட்டனர். கார் டிரைவர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். போலீஸார் விசாரணைக்காக மீண்டும் அதே வீட்டிற்கு சென்ற போது கதவு பூட்டப்பட்டு இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகும்படி மனோரமாவிற்கு போலீஸார் சம்மன் அனுப்பி இருக்கின்றனர். பூஜா கேட்கர் தனது பெயர், சாதியை மாற்றி ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வெற்றி பெற்றதாக கூறி அவர் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். ஒரு ஆண்டு கழித்த நிலையில் மீண்டும் கார் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

விருதுநகர்: "பாறையாக உள்ள பட்டா நிலத்தை மாற்றி தாங்க" - தீக்குளிக்க முயன்ற பெண்; பின்னணி என்ன?

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மொட்டை மலை, பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பூங்கொடி. இவருக்கு அப்பகுதியில் அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது. ஆனால், "அந்த இடம் முழுவதும் பாறையாக... மேலும் பார்க்க

உபி: "வெறுத்துப்போய் இம்முடிவை எடுத்தேன்" - விவாகரத்து கொடுக்காத கணவனைக் கொன்ற மனைவி; என்ன நடந்தது?

உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் என்ற இடத்தில் வசித்தவர் நாகேஷ்வர். இவரது மனைவி நேகா. இவர்களுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. நாகேஷ்வர் அவர் வசித்த இடத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நெடுஞ்ச... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மதுபோதையில் தகராறு; பிளேடால் தந்தையின் கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொலை செய்த மகன்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊரணி பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி. கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவருடைய மகன் ராகுல் காந்தி பெயிண்டராக வேலை செய்து வருகிறார். தந்தை–மகன் இருவருக்கும் மது அருந்தும... மேலும் பார்க்க

தூங்கிக் கொண்டிருந்த மாணவர்களின் கண்களை பசையால் ஒட்டிய நண்பர்கள் - விடுதியில் நடந்த விபரீதம்

பள்ளி விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த மாணவர்களின் கண்களில் பசையை சக மாணவர்கள் தடவி விட்டுள்ளனர். இதனால் அவர்கள் காலையில் மிகுந்த வலியுடன் விழித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்கள் தற்போது மருத்துவமனையில... மேலும் பார்க்க

ஈரோடு: கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை; திமுக கவுன்சிலர் உள்பட இருவர் கைது - நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்துக்குட்பட்ட பெத்தாம்பாளையம் பேரூராட்சிப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பெத்தாம்பாளையம... மேலும் பார்க்க

சேலம்: கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிவித்த அரசு மருத்துவர், புரோக்கர் கைது

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் பணத்தைப் பெற்றுக்கொண்டு கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தைத் தெரிவித்து வருவதாக சுகாதாரத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்ப... மேலும் பார்க்க