செய்திகள் :

கடந்த 4 ஆண்டுகளில் 6,597 படுகொலைகள்: அன்புமணி

post image

திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் மட்டும் 6,597 படுகொலைகள்  சம்பவங்கள் நடந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்ததாவது:

”மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளத்தைச் சேர்ந்த காளீஸ்வரன் என்ற ரெளடி நள்ளிரவில் அவரது வீட்டு வாயிலில் வைத்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் திட்டமிட்ட படுகொலைகள் நடக்காத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் அதைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

கொலை செய்யப்பட்ட காளீஸ்வரன் மதுரை மாநகர திமுக நிர்வாகி வி.கே.குருசாமியின் உறவினர் ஆவார். அவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. காளீஸ்வரனுக்கும், அவரது எதிர் குழுவினருக்கும் இடையே தொடர்ந்து நடந்து வரும் மோதலில் இதுவரை 15-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாகவே இந்த படுகொலையும் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. காளீஸ்வரனின் எதிரிகள் சிறையில் இருந்த படியே சதித்திட்டம் தீட்டி இந்தக் கொலையை நடத்தியிருப்பதாகவும் தெரிகிறது.

இதையும் படிக்க: இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் மூத்த அரசியல் தலைவர் பலி!

தமிழ்நாட்டில் கொலைகள் நடக்கும் போதெல்லாம் அவை தனிப்பட்ட காரணங்களுக்காக நடத்தப்பட்டது என்றும், கொலையாளிகளை விரைவாக கைது செய்து விட்டோம் என்றும் கூறி சிக்கலை திசை திருப்புவதையே திமுக அரசு வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது.

ஆனால், காளீஸ்வரன் விவகாரத்தில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பது தெரிந்தும் கூட, சிறையிலிருந்து தீட்டப்பட்ட சதித் திட்டத்தை முறியடிக்க முடியாமல் திமுக அரசு தோல்வியடைந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 4.52 படுகொலைகள் வீதம் திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் மட்டும் 6597 படுகொலைகள் நடந்துள்ளன.

இந்த எண்ணிக்கை அச்சமூட்டும் வகையிலும், கவலையளிக்கும் வகையிலும் இருக்கும் போதிலும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களைத் தடுத்து தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க முடியாமல் திமுக அரசு உறங்கிக் கொண்டிருக்கிறது. இனியாவது திமுக அரசு அதன் உறக்கத்தைக் கலைத்து தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

'திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்' - சேகர்பாபு

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கிற்குப் பிறகு அது திருப்பதிக்கு இணையாக மாறும் என பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர், திருச்செந்தூர், தஞ்சாவ... மேலும் பார்க்க

ரூ. 61 கோடியில் 500 முழுநேர நியாய விலைக் கடைகள்: அமைச்சர் பெரியசாமி

ஊரகப் பகுதியில் ரூ. 61 கோடி மதிப்பீட்டில் 500 முழுநேர நியாய விலைக் கடைகள் கட்டப்படும் என்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி சட்டப் பேரவையில் அறிவித்தார்.சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ... மேலும் பார்க்க

தமிழகம் முழுவதும் மார்ச் 29-ல் திமுக ஆர்ப்பாட்டம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் (எம்ஜிஎன்ஆர்இஜிஏ - MGNREGA) மூலம் தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ. 4,034 கோடி நிதியை வழங்காமல் இருக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ... மேலும் பார்க்க

72 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கம்: முதல்வர் ஸ்டாலின்

புதியதாக 72 காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 26) சட்டப் பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்... மேலும் பார்க்க

மார்ச் மாதச் சம்பளம்: தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு மார்ச் மாதச் சம்பளம் வரும் ஏப். 2 ஆம் தேதி வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழக அரசின... மேலும் பார்க்க

சென்னையில் 2 புதிய வழித்தடம்: மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர்!

சென்னை மெட்ரோ ரயிலின் 2 புதிய வழித்தடத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது.தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரையிலும், கலங்கரை விளக்கம் முதல் ... மேலும் பார்க்க