செய்திகள் :

திடீரென வெடித்து சிதறிய பட்டாசு - துண்டு துண்டான பொள்ளாச்சி விவசாயியின் கை விரல்கள்... என்ன நடந்தது?

post image

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள பானும்பலம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி முத்துக்குமார். இவர் நேற்று தன் வீட்டில் இருந்தபோது பட்டாசு வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் அவரது வலது கையில் உள்ள ஐந்து விரல்களும் துண்டாகின.

மேலும் தொடை, மார்பு பகுதியிலும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து  அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

முத்துக்குமார் தோட்டத்துக்கு யானை வந்ததாகவும் அந்த யானையை விரட்டுவதற்காக அவர் பட்டாசு வீசியதாகவும்... அப்போது திடீரென பட்டாசு வெடித்து விபத்து நிகழ்ந்ததாகவும் முதலில் தகவல் வெளியானது.

முத்துக்குமார்

இதனால் அதிர்ச்சி ஏற்பட்டது. இது குறித்து பொள்ளாச்சி வனச்சரகர் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்தனர். அதில் முத்துக்குமார் யானையை விரட்டுவதற்காக பட்டாசு வீசவில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது.

இது குறித்து வனத்துறையினர்  கூறுகையில், “முத்துக்குமார் கேரளாவில் இருந்து வெடி பொருள் வாங்கி தன் பண்ணையில் வைத்திருந்தார். வன எல்லையிலிருந்து 500 மீட்டர் தொலைவில் அவரின் பண்ணை உள்ளது. இரவில் அவர் தோட்டத்தில் தீ வைத்திருக்கிறார்.

வனத்துறையினர் ஆய்வு

அந்த நேரத்தில் தீப்பொறி தற்செயலாக பட்டாசு வைக்கப்பட்டிருந்த பையில் பட்டு முழு பட்டாசுகளும் வெடித்தன. அவர் எந்த யானையையும் விரட்டவில்லை. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.” என்றனர்.

திண்டுக்கல்: நிலத்தகராறில் 3 பேர் கொலையா? கிணற்றில் உடல்களைத் தேடிய போலீஸார்; நடந்தது என்ன?

திண்டுக்கல் அருகே அணைப்பட்டியில் இருதரப்புக்கும் இடையில் நிலப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.இதில் 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களின் உடல்கள் அணைப்பட்டியில் உள்ள ஒரு கிணற்றில் வீச... மேலும் பார்க்க

சைபர் கிரிமினல்களிடம் ரூ.50 லட்சத்தை இழந்த வயதான தம்பதி தற்கொலை

இணையத்தளக் குற்றவாளிகள் பெண்கள் மற்றும் முதியவர்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களிடம் இருக்கும் பணத்தைப் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன. அதிகமானோர் கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ள... மேலும் பார்க்க

கிரிக்கெட்டர் முதல் ஐடி ஊழியர் வரை - உயர் ரக போதை பொருளால் கோவையை கலங்கடித்த நெட்வொர்க்!

கோவை மாவட்டத்தில் உயர் ரக போதை பொருள்கள் அதிகளவு பயன்படுத்துவதாக புகார் உள்ளது. இந்நலையில் ஆர்.எஸ்.புரம் சுற்று வட்டார பகுதிகளில் உயர் ரக போதை பொருள்கள் விற்பனை செய்யும் ஒரு நெட்வொர்க் குறித்து காவல்த... மேலும் பார்க்க

`கொலை செய்துவிட்டேன், சொல்லிவிடுங்கள்...' - மனைவியைக் கொன்று சூட்கேஸில் உடலை அடைத்த இன்ஜினீயர்

இந்தியாவில் பெங்களூரு சாஃப்ட்வேர் தலைநகரமாக விளங்குகிறது. இதனால் நாடு முழுவதும் இருந்து சாப்ட்வேர் இன்ஜினீயர்கள் பெங்களூரு வந்து வேலை செய்கின்றனர். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மும்பையை சேர்ந்த ராக... மேலும் பார்க்க

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கிய 70 வயது பாடகர்... ரூ.1.2 கோடியைப் பறித்த சைபர் கிரிமினல்கள்!

நாடு முழுவதும் அப்பாவி மக்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களிடமிருந்து பணத்தை பறிக்கும் சம்பங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது. மும்பை, ஐதராபாத் போன்ற நகரங்களில் இது போன்ற குற்றங்கள் அதிக அ... மேலும் பார்க்க

பெங்களூரு: ட்ராலியில் பெண்ணின் உடல் மீட்பு; போலீசாருக்கு போன் செய்த கணவர் கைது!

பெங்களூருவில் 32 வயதுடைய பெண் கௌரி அனில் சம்ப்ரேக்கர் உடலை ட்ராலியில் கண்டெடுத்துள்ளனர் பெங்களூரு போலீசார். தென்கிழக்கு பெங்களூருவை சேர்ந்தவர் ராகேஷ் ராஜேந்திர கெடேகர். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ப... மேலும் பார்க்க