ஆழ்கடல் சுரங்க ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும்: பிரதமருக்கு ராகுல் கடிதம்
எக்ஸ் தளம் மீண்டும் விற்பனையானது!
எக்ஸ் தளம் மீண்டும் கைமாற்றப்பட்டுள்ளது. ஆனால், இம்முறையும் அதன் உரிமையாளராக எலான் மஸ்க் என்பதுதான் சுவாரசியமே!
எக்ஸ் தளத்தைப் பயன்படுத்துவோர், அதில் கணக்கு வைத்திருப்போர் எண்ணிக்கை 60 கோடிக்கும் மேல். இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப ஆய்வுக்காக எலான் மஸ்க்கால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட எக்ஸ் - ஏஐ பெயரிலான புத்தாக்க நிறுவனத்துடன் எக்ஸ் தளம் இணைக்கப்படுவதாகவும், இவை இரண்டும் இனிமேல் ஒரே நிறுவனமாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.