செய்திகள் :

`மாநகராட்சியாக மாறும் புதுச்சேரி நகராட்சிகள்!' – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

post image

புதுச்சேரி சட்டப்பேரவையில் 2025-2026 நிதியாண்டுக்கான பட்ஜெட் மார்ச் 12-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக விவாதமும், எம்.எல்.ஏக்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தும் வருகின்றனர்.

இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ரங்கசாமி, ``புதுச்சேரி சுகாதாரத்துறையில் பணியாற்றும் ஆஷா பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் சம்பளம் ரூ.10,000-ல் இருந்து ரூ.18,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

அதேபோல புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு புதுச்சேரி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்” என்று அறிவித்தார்.

புதுச்சேரி அரசு
புதுச்சேரி அரசு

அவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் நமச்சிவாயம், ``நீட் பயிற்சி பெறுவதற்கு இதுவரை 585 மாணவர்கள் விண்ணப்பித்திருக்கின்றனர்.

புதுச்சேரி நகரப் பகுதிகளில் இரண்டு, கிராமப்பகுதிகளில் இரண்டு மற்றும் காரைக்காலில் ஒரு நீட் பயிற்சி மையங்கள் அரசு சார்பில் உருவாக்கப்படும். மேலும் 2025 கல்வியாண்டில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டில் அனைத்து பள்ளி நாட்களிலும் மாலை சிற்றுண்டி வழங்கப்படும்” என்றார்.

`இது ஃபெயிலான சட்டமன்றம்' - அதிமுக எம்.எல்.ஏ கமென்ட்; சூடான சபாநாயகர்! - என்ன நடந்தது?

2021 தேர்தல் அறிக்கையில், ‘ஆண்டுக்கு 100 நாள்கள் சட்டமன்றக் கூட்டத்தொடர் நடத்தப்படும்’ என தி.மு.க வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், இந்த நான்கு ஆண்டுகளில் 150 நாள்களுக்கு குறைவாகத்தான் சட்டமன்றம் கூட்... மேலும் பார்க்க

வாரணாசி: நவராத்திரியில் சாலையில் நமாஸ் செய்தால் பாஸ்போர்ட் ரத்து; இறைச்சிக் கடைகளுக்குத் தடை

நவராத்திரி திருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி ஏப்ரல் 7ம் தேதி வரை நடைபெறுகிறது. அதேசமயம் முஸ்லிம்களின் ரம்ஜான் பண்டிகை வரும் திங்கள் கிழமை கொண்டாடப்படுகிறது.இதனால் உத்தரப்பிரதேசத்தில் மாநில அரசு ப... மேலும் பார்க்க

கிராமசபை கூட்டம்னு சொல்லிட்டு ஏன் திமுக ஆர்ப்பாட்டமாக மாத்துறீங்க? சரமாரி கேள்வி; வெளியேறிய அமைச்சர்

கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் வேலை நடைபெற்ற வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளர்கள... மேலும் பார்க்க

`தெற்கின் மேல் சமூக, அரசியல், பண்பாட்டுப் படையெடுப்பு...' - உகாதி வாழ்த்துச் செய்தியில் முதல்வர்!

நாளை தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கான புத்தாண்டு விழாவான உகாதி கொண்டாடப்படவிருக்கும் நிலையில், வாழ்த்து செய்தி பகிர்ந்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.முதல்வரின் Ugadi வாழ்த்து செய்தி:-திராவிட மொழ... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து செங்கோட்டையன்; டெல்லிக்குப் படையெடுக்கும் அதிமுக தலைவர்கள்

2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க பல சிக்கல்களால், பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது என்று கூறியிருந்தது. இருப்பினும் 2026 சட்டமன்றத் தேர்தல... மேலும் பார்க்க

தவெக: "அதை விஜய்யிடம்தான் கேட்க வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?

அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து இன்று பேசியிருக்கிறார். அப்போது, "நேற்று( மார்ச் 28) நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் பொதுமக்... மேலும் பார்க்க