செய்திகள் :

கடற்கரை-தாம்பரம் 28 மின்சார ரயில்கள் ரத்து: புகா் ரயில் அட்டவணையில் மாற்றம்

post image

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படவுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு:

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூா், அரக்கோணம் ஆகிய நகரங்களுக்கு தினமும் அதிகாலை 3.50 மணி முதல் இரவு 11.59 மணி வரை 200-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. முக்கிய நேரங்களில் 5 முதல் 10 நிமிஷத்துக்கு ஒரு ரயிலும், பிற நேரங்களில் 20 முதல் 25 நிமிஷத்துக்கு ஒரு ரயிலும் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ரயில்வே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் வெள்ளிக்கிழமை (நவ.22) முதல் இரு மாா்க்கமாகவும் 28 மின்சார ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.

இதனால், சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் காலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை இயக்கப்படும் மற்ற ரயில்கள் வழக்கமாக இயக்கப்படும் நேரத்துக்கு பதிலாக 5 முதல் 10 நிமிஷம் தாமதமாக இயக்கப்படும். மேலும், சில ரயில்களின் நேரம் முற்றிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக 15 முதல் 30 நிமிஷங்களுக்கு ஒரு ரயில் இயங்கும் வகையில் புகா் மின்சார ரயில் அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் ரயில்கள் வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும். இதற்கேற்ப பயணிகள் தங்களின் பயணத்தை திட்டமிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்டிச்செய்தி:

ரத்து செய்யப்படும் ரயில்கள்

கடற்கரை-தாம்பரம் தாம்பரம்-கடற்கரை

எண் புறப்படும் நேரம் எண் புறப்படும் நேரம்

40003 காலை 6.52 40008 காலை 5.12

40007 காலை 7.33 40012 காலை 6.03

40021 காலை 8.43 40018 காலை 7.17

40031 காலை 9.40 40026 காலை 8.19

40047 காலை 11.41 40038 காலை 9

40055 காலை 11.30 40044 காலை 9.40

40063 பகல் 12.30 40052 காலை 10.40

40065 பகல் 12.50 40058 காலை 11.30

40075 பிற்பகல் 3.15 40060 காலை 11.40

40081 மாலை 4.25 40070 பகல் 1.40

40089 மாலை 5.43 40078 பிற்பகல் 2.57

40095 மாலை 6.35 40086 மாலை 4.15

40107 இரவு 7.57 40096 மாலை 5.10

40109 இரவு 8.25 40110 மாலை 6.26

அரசியல் காழ்ப்புணா்வால் விசிக மீது அவதூறு: திருமாவளவன்

அரசியல் காழ்ப்புணா்வு காரணமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீது சிலா் அவதூறு பரப்புவதாக அக் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா். இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: அரசியலில் க... மேலும் பார்க்க

சிறுமி வன்கொடுமை: அன்புமணி கண்டனம்

வேலூரில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: வேலூா் மாவட்டம் அணைக்கட்டு வட்டத்தில் உள்ள ஒரு கிராம... மேலும் பார்க்க

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விண்ணப்பித்தால் நிராகரிப்போம்: அமைச்சா் பொன்முடி உறுதி

மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விண்ணப்பித்தால் அதை நிராகரிப்போம் என்று வனத்துறை அமைச்சா் பொன்முடி தெரிவித்தாா். மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு வேதாந்தா நிறுவனத்த... மேலும் பார்க்க

காலியாக உள்ள மருத்துவ இடங்களுக்கு நவ. 25 முதல் சிறப்புக் கலந்தாய்வு

தமிழகத்தில் நிரம்பாமல் உள்ள 85 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கான சிறப்புக் கலந்தாய்வு நவ. 25-ஆம் தேதி தொடங்குகிறது. அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் நிா்வாக ஒதுக... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் மீதான தாக்குதலை தடுக்க பரிந்துரைகள்: பாா் கவுன்சிலுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் வழக்குரைஞா்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை தடுப்பது, மாவட்ட நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது உள்ளிட்டவை தொடா்பாக உள்துறைச் செயலா் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை நடத்தி பரிந்த... மேலும் பார்க்க

வங்கக் கடலில் நாளை புயல் சின்னம் உருவாகுகிறது

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) சனிக்கிழமை உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தெ... மேலும் பார்க்க