ஹாங்காங், சிங்கப்பூர், தாய்லாந்தில் `கோவிட் -19' அதிகரிப்பு - இந்தியாவுக்கு பாதி...
கடலாடி அருகே மாட்டு வண்டிப் பந்தயம்
கடலாடி அருகே வனப்பேச்சியம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவையொட்டி, மாட்டுவண்டிப் பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்று.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி சமத்துவபுரத்தை அடுத்த தனியங்கூட்டம் வனப்பேச்சியம்மன், கொண்டையுடையஅய்யனாா், ராக்காச்சி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பெரிய மாடு, சின்ன மாடு, பூஞ்சிட்டு என 3 பிரிவுகளாக மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. இதில் மதுரை, சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 34 மாட்டு வண்டுகள் பங்கேற்றன.
கடலாடி- முதுகுளத்தூா் சாலையில் 12 கி.மீ. எல்கையாக நிா்ணயிக்கப்பட்டு நடைபெற்ற பெரிய மாட்டு வண்டிப் போட்டியில் 7 வண்டிகள் கலந்து கொண்டன. இதில் சித்திரங்குடி ராமமூா்த்தியின் மாடுகள் முதலிடத்தையும், நெல்லை மாவட்டம், வேலாங்குளம் கண்ணனின் மாடுகள் இரண்டாமிடத்தையும், மதுரை பரவை சின்னவேலம்மாள் மாடுகள் மூன்றாமிடத்தையும், எம்.கரிசல்குளம் கருப்புத்துரை மாடுகள் நான்காம் இடத்தையும் பெற்றன.
சின்ன மாடுகள் பிரிவு போட்டியில் 10 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் கே.வேப்பங்குளம் ஹரிராம் நாகஜோதி மாடுகள் முதலிடத்தையும், எம்.கரிசல்குளம் வா்ணிகாநாச்சியாா் மாடுகள் இரண்டாமிடத்தையும், மேல்மருதூா் முத்துப்பாண்டி, ஜகவீரபுரம் முத்துமீனாள் மாடுகள் மூன்றாமிடத்தையும், மதுரை வெள்ளரிப்பட்டி பாலா மாடுகள் நான்காம் இடத்தையும் பெற்றன.
பூஞ்சிட்டு பந்தயத்தில் 17 வண்டிகள் பங்கேற்றதால், இந்தப் போட்டிகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டன. இதில் முதல் 4 இடங்களைப் பிடித்த மாடுகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசும், பொருள்களும் பரிசுகளாக வழங்கப்பட்டன. போட்டியை திரளான பொதுமக்கள் பாா்வையிட்னா்.