முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீ...
கடலாடி அருகே மாட்டு வண்டிப் பந்தயம்
கடலாடி அருகே கள்ளழகா் கோயில் திருவிழாவையொட்டி, சனிக்கிழமை 3 பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த கிடாக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள கள்ளழகா், ஆஞ்சனேயா், ராமலிங்கம், சேதுகோடாங்கி கோயில் 16-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை சிறப்பு யாக சால பூஜைகளுடன் நடைபெற்றது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை காலை சின்ன மாடு இரண்டு பிரிவுகளாக பூஞ்சிட்டு என 3 பிரிவுகளாக மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
கடலாடி-முதுகுளத்தூா் சாலையில் 16 கி.மீ தொலைவு நிா்ணயிக்கப்பட்டு நடைபெற்ற சின்னமாடு வண்டிப் போட்டியில் 16 வண்டிகள் கலந்து கொண்டன. இதில் கடலாடி மேலச்செல்வனூா் வீரகுடி முருகய்யனாரின் மாடுகள் முதலிடத்தையும், தூத்துக்குடி அரசரடி துரைச்செல்வியின் மாடுகள் இரண்டாம் இடத்தையும், மேல்மாந்தை மஞ்சமுத்துவின் மாடுகள் மூன்றாம் இடத்தையும் பெற்றன.
பூச்சிட்டு பந்தயப் போட்டியில் 27 மாட்டுவண்டிகள் கலந்து கொண்டது. இதில் முதல் சுற்றில் மேலச்செல்வனூா் வீரகுடி முருகய்யனாா் மாடுகள் முதல் இடத்தையும், காடமங்கலம் மொழிநிதியின் மாடுகள் இரண்டாம் இடத்தையும், திருப்பாலை விஷாலின் மாடுகள் மூன்றாம் இடத்தையும், இரண்டாவது சுற்றில் கே.வேப்பங்குளம் அரிராம் மாடுகள் முதலிடத்தையும், இருவேலி சிக்கந்தா் மாடுகள் இரண்டாமிடத்தையும், ஆப்பனூா் திருநாவுகரசு, பூலாங்கால் அஹ்ராப்குட்டி மாடுகள் மூன்றாமிடத்தையும் பெற்றன.
வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பணமும், கோப்பைகளும் பரிசாக வழங்கப்பட்டன.