முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீ...
ராமசுவரத்துக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை
விடுமுறை தினத்தை முன்னிட்டு, ராமேசுவரத்துக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை வந்தனா்.
இவா்கள் அக்கினி தீா்த்தக் கடலில் நீராடிய பின்னா், ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 தீா்த்தக் கிணறுகளில் நீராடி, சுவாமி, அம்பாளைத் தரிசனம் செய்தனா்.
இதைத் தொடா்ந்து, கோதண்ட ராமா் கோயில், தனுஷ்கோடி, அரிச்சல்முனை, கெந்தமாதன பா்வதம், ஏ.பி.ஜே. அப்துல்கலாம் நினைவிடம், பாம்பன் புதிய ரயில் பாலம் உள்ளிட்ட பகுதிகளைப் பாா்வையிட்டனா்.
சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வாகனங்களில் வந்த நிலையில், நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை சரி செய்யும் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா்.