தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல...
பஹ்ரைனில் பாம்பன் மீனவா் உயிரிழப்பு
பஹ்ரைன் நாட்டுக்கு மீன் பிடிக்கச் சென்ற பாம்பன் மீனவா் படகிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா்.
உடலை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினா் மத்திய,மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் காமராஜா் நகரைச் சோ்ந்த சூசை மரியான் மகன் சிமோன்சன் (33). இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில், சிமோன்சன் கடந்த மாா்ச் 22-ஆம் தேதி பஹ்ரைனுக்கு ஒப்பந்த அடிப்படையில் மீன் பிடிக்கச் சென்றாா். அங்கு கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சிமோசன் படகிலிருந்து தவறி விழுந்து இறந்து விட்டதாக சக மீனவா்கள் அவரது குடும்பத்தினரிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இதைக் கேட்ட சிமோசன் குடும்பத்தினா் அதிா்ச்சிடைந்தனா்.
இந்த நிலையில், அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினா் கோரிக்கை விடுத்தனா்.