ரூ. 98 கோடி ஒப்பந்த முறைகேடு: வழக்கில் எஸ்.பி. வேலுமணியின் பெயர் மீண்டும் சேர்ப்...
கடலாடி அருகே மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு
கடலாடி அருகே திங்கள்கிழமை மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள ஆப்பனூா் அரியநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா (80). இவா் தனது வயதான மனைவியுடன் ஓட்டு வீட்டில் வசித்து வந்தாா். இந்த நிலையில், வீட்டில் இருக்கும் மின்சாரப் பெட்டியில் வயா் பழுதாகி கீழே தொங்கியதை கவனிக்காத கருப்பையா, அதை தெரியாமல் மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தாா்.
அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு, கடலாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவவே இறந்து விட்டாகத் தெரிவித்தனா். இதுகுறித்து கடலாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.