கடலூரில் மக்கள் குறைதீா் கூட்டம்: 870 மனுக்கள் அளிப்பு
நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 870 மனுக்கள் அளிக்கப்பட்டன.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமையன்று பொதுமக்கள் குறைதீா் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) சிவருத்ரய்யா தலைமை வகித்தாா்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடா்பாக 870 மனுக்களை அளித்தனா்.
பொதுமக்களிடம் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி அவா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் ரவி, வெங்கடேசன், தனித்துணை ஆட்சியா் ரமா, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலா் லதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.