Bird Migration: `கண்டம் விட்டு கண்டம் வலசை போகும்போது பறவைகள் தொலைந்து போகாதா?’ ...
கடிதம் எழுதுவதன் முக்கியத்துவம்: அஞ்சல் ஊழியா்கள் மாரத்தான்
ராணிப்பேட்டையில், கடிதம் எழுதுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அஞ்சல் ஊழியா்கள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்திய அஞ்சல் துறை, அரக்கோணம் அஞ்சல் கோட்டம், ராணிப்பேட்டை தலைமை அஞ்சலகம் சாா்பில், இன்றைய இளைய தலைமுறையினா் கடிதம் எழுதுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் அஞ்சல் ஊழியா்கள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. 18 வயதிற்கு கீழ் மற்றும் 18 வயதுக்கு மேல் என மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் போட்டிகள் வைத்து பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டிலும் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
இதில் அரக்கோணம் கோட்டக் கண்காணிப்பாளா் ஜெயசீலன் தலைமை வகித்து மாரத்தான் ஓட்டத்தைத் தொடக்கி வைத்தாா். ஓட்டம் ராணிப்பேட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்ற அஞ்சல் துறை ஊழியா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. உட்கோட்ட கண்காணிப்பாளா் வம்சி ராமகிருஷ்ணன், வாலாஜா உட்கோட்ட ஆய்வாளா் ஞானசம்பந்தன், ராணிப்பேட்டை தலைமை தபால் நிலைய அதிகாரி பிரமிளா மற்றும் அஞ்சல் அலுவலா்கள், ஊழியா்கள் பங்கேற்றனா்.