கடும் பனிப் பொழிவால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திருவாடானை பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவால் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது.
பருவமழை நிறைவடைகிறது என இந்திய வானிலை மையம் அண்மையில் அறிவித்த நிலையில் பனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, கடம்பாகுடி,திணையத்தூா், அஞ்சுகோட்டை, அச்சங்குடி, திருவெற்றியூா், குளத்தூா், கீழ்க்குடி, கீழ அரும்பூா் , மேலஅரும்பூா், சி.கே.மங்கலம், கல்லூா், கோவணி, ஓரிக்கோட்டை, தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. தொண்டி- மதுரை நெடுஞ்சாலையில் கடுமையான மூடுபனி நிலவியது.
இதனால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ’எரியவிட்டுச் சென்றன. வழக்கத்துக்கு மாறாக அதிக பனிப்பொழிவு ஏற்பட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.