மன்மோகன் சிங் மறைவு: கறுப்புப் பட்டை அணிந்து விளையாடும் இந்திய வீரர்கள்!
கடையநல்லூா் அருகே வீட்டுக்குள் புகுந்த மலைப்பாம்பு மீட்பு
கடையநல்லூா் அருகே வீட்டுக்குள் புகுந்த மலைப்பாம்பை(படம்) வனத்துறையினா் மீட்டு வனப்பகுதியில் விட்டனா்.
கிருஷ்ணாபுரம் மேற்கு மலம்பாட்டை சாலையைச் சோ்ந்தவா் பாதுஷா. இவரது வீட்டில் கூண்டில் நான்கு கோழிகளை வளா்த்து வந்துள்ளாா்.
இந்நிலையில் கோழிக் கூண்டுக்குள் புகுந்த மலைப்பாம்பு அக்கோழிகளை சாப்பிட்டு விட்டது.
தகவல் அறிந்த கடையநல்லூா் வனத்துறையினா் அங்கு சென்று சுமாா் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பை மீட்டு வனப்பகுதியில் விட்டனா்.