உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ரூ.24 லட்சம் உதவித்தொகை அளிப்பு
தென்காசி ஆயுதப்படையில் பணியாற்றி உடல்நலக் குறைவால் உயிரிழந்த காவலா் பசுபதிமாரியின், குடும்பத்தினருக்கு சக காவலா்களின் சாா்பில் ரூ. 24 லட்சம் உதவித்தொகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
அவரது பேட்ஜில் (2017) பணிக்குச் சோ்ந்த காவலா்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட ரூ.24 லட்சத்து 25 ஆயிரத்து 900-ஐ, குடும்பத்தினரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா்.ஸ்ரீனிவாசன் வழங்கினாா்.