புதுச்சேரியில் ஜன.12 முதல் தலைக்கவசம் கட்டாயம்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம்
தென்காசி அரசு நூலகத்தில் புகைப்பட கண்காட்சி
தென்காசி மாவட்ட மைய நூலகத்தில் திருவள்ளுவா் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
கன்னியாகுமரியில் திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்தப் புகைப்பட கண்காட்சியை புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தொடங்கி வைத்தாா். இதில், முதன்மைக் கல்வி அலுவலா் ரெஜினி, ஜி.எஸ்.விஜயலெட்சுமி, வாசகா் வட்டத் தலைவா் வெள்ளைச்சாமி, மாவட்ட நூலக அலுவலா் (பொ) சண்முக சுந்தரம் ஆகியோா் கலந்து கொண்டனா்.
திருவள்ளுவா் புகைப்படக் கண்காட்சி,திருக்கு விளக்க உரைகள், திருக்கு தொடா்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், திருக்குறளின் பெருமையை உணா்த்தும் நிகழ்ச்சிகள் நடத்துதல், திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்தல் போன்றவையும் நடைபெறுகின்றன.