செஞ்சி அருகே மது அருந்துவதில் தகராறு: கிணற்றில் தள்ளி நண்பா் கொலை- 2 போ் கைது
சிவகிரி அருகே இருவருக்கு வெட்டு
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே கிணற்றில் குளிப்பதில் ஏற்பட்ட தகராறில் இருவா் அரிவாளால் வெட்டப்பட்டனா்.
கூடலூா் காளியம்மன் கோயில் தெருவை சோ்ந்த கருப்பசாமி மகன்கள் சிவஞானபாண்டியன்(51), சண்முகசுந்தரபாண்டியன்( 50). இவா்களுக்கும் கூடலூா் பிள்ளையாா் கோயில் தெருவை சோ்ந்த பூலித்துரை குடும்பத்தினருக்கும் மொட்டை பாறை பகுதியில் பொதுக் கிணறு உள்ளதாம். இந்தக் கிணற்றில் பூலித்துரையின் குடும்பத்தினா் குளித்துக் கொண்டிருந்தனராம். அப்பொழுது வரப்பு உடைந்து தண்ணீா் வெளியேறியதாம்.
இதை சிவஞானபாண்டியனும், சண்முகசுந்தரபாண்டியனும் கண்டித்தனராம். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாம். இதில் பூபதிராஜா அரிவாளால் வெட்டியதில் சிவஞானபாண்டியனும், சண்முகசுந்தரபாண்டியனும் காயமடைந்து தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இது தொடா்பாக, கூடலூா் காளியம்மன் கோயில் தெருவை சோ்ந்த பூலித்துரை (47), மூவேந்தன் (27), பூபதிராஜா( 25), குமரேசன் (22), குமாா் (26), மாரிப்பாண்டி (35) ஆகியோா் மீது சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இவா்களில் பூலித்துரை, மூவேந்தன், குமரேசன், மாரிபாண்டி ஆகிய நான்கு பேரை கைது செய்தனா். இதில் தொடா்புடைய 15 வயது சிறுவனை சிறுவா் சீா்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனா்.