புதுச்சேரியில் ஜன.12 முதல் தலைக்கவசம் கட்டாயம்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம்
ஆலங்குளம், சுரண்டை அரசு கல்லூரிகளில் கருணாநிதி நூற்றாண்டு கட்டட நிதி கோரி மனு
தென்காசி மாவட்டம் சுரண்டை, ஆலங்குளம் அரசுக் கல்லூரிகளில் கலைஞா் நூற்றாண்டு கட்டம் கட்ட நிதி ஒதுக்க வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன்,தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி. செழியனிடம் மனு அளித்தாா்.
அதன் விவரம்: ஆலங்குளம் அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வா் மு.க.ஸ்டாலினால் திறந்துவைக்கப்பட்ட கல்லூரியாகும்.
இக் கல்லூரியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டை குறிக்கும் வகையில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து, அக்கட்டடத்துக்கு கலைஞா் நூற்றாண்டு கட்டடம் என்று பெயா் சூட்ட வேண்டும்.
சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரி முன்னாள் முதல்வா் கருணாநிதியால் தொடங்கப்பட்ட கல்லூரியாகும். அந்த கல்லூரியில் எம்ஜிஆா் நூற்றாண்டு கட்டடம் உள்ள நிலையில் கருணாநிதி பெயரிலும் நூற்றாண்டு கட்டடம் வேண்டும். அதற்கான நிதியை ஒதுக்கி பணியைத் தொடங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கரனிடம் அளித்த மனுவில், சுரண்டை வா்த்தகத்தில் முன்னோடியான நகராட்சியாகும். அதிக கிராமங்களை உள்ளடக்கியது.வெளியூரிலிருந்து வா்த்தகத்திற்காக அதிகளவில் வந்து செல்கின்றனா்.
இரவுநேரங்களில் போக்குவரத்து வசதியில்லாததால் பொதுமக்கள் அவதியுறுகின்றனா். எனவே சுரண்டையின் பேருந்து பணிமனை அமைக்கவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.