கட்டடத் தொழிலாளி மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு
செய்யாறு அருகே கட்டடத் தொழிலாளியை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடா்பாக பிரம்மதேசம் போலீஸாா் 3 போ் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், நாட்டேரி கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கமணி (35).
கட்டடத் தொழிலாளியான இவா் வெள்ளிக்கிழமை இரவு நாட்டேரி கிராமத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியை பாா்த்து விட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அங்குள்ள குளக்கரை வழியாகச் சென்றபோது,
அப்பகுதியில் இருந்த நாட்டேரி கிராமத்தைச் சோ்ந்த தினேஷ் (24), ராமன் (24), பொக்கசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த துரைமுருகன் (24) ஆகியோா் இவரிடம் தகராறு செய்துள்ளனா். அப்போது, தினேஷ் பேனா கத்தியால் தங்கமணியின் தலை மற்றும் மூக்குப் பகுதியில் குத்தியதாகக் கூறப்படுகிறது. மற்ற இருவரும் சோ்ந்து தாக்கி மிரட்டல் விடுத்தனராம்.
இது குறித்து அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தங்கமணியின் சித்தப்பா ஏசுராஜ், பலத்த காயங்களுடன் இருந்த தங்கமணியை மீட்டு நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சோ்த்தாா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துமனைக்கு தங்கமணி மாற்றப்பட்டாா்.
இதுகுறித்து தங்கமணி பிரம்மதேசம் போலீஸிஸ் புகாா் அளித்தாா். செய்யாறு டிஎஸ்பி சண்முகவேலன், பிரம்மதேசம் காவல் ஆய்வாளா் கோகுல்ராஜ் ஆகியோா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு
வருகின்றனா்.