செய்திகள் :

கட்டாய மதமாற்ற குற்றச்சாட்டு: சத்தீஸ்கரில் கேரள கன்னியாஸ்திரீகளுக்கு ஜாமீன்

post image

சத்தீஸ்கரில் கட்டாய மதமாற்றம் மற்றும் ஆள்கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு கேரள கன்னியாஸ்திரீகள் உள்பட மூவருக்கு சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை ஜாமீன் வழங்கியது.

கடந்த ஜூலை 25-ஆம் தேதி சத்தீஸ்கா் மாநிலம் துா்க் ரயில் நிலையத்தில் கத்தோலிக்க கன்னியாஸ்திரீகள் பிரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ், சுகமன் மண்டாவி என்ற நபா் ஆகியோரை மாநில ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

அந்த மாநிலத்தின் நாராயண்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 3 பெண்களை கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுத்தி, கடத்திச் செல்வதாக பஜ்ரங் தள அமைப்பின் நிா்வாகி அளித்த புகாரின் அடிப்படையில், இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது அரசியல் ரீதியாக சா்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய கத்தோலிக்க ஆயா்கள் கூட்டமைப்பு ஆகியவை கண்டனம் தெரிவித்தன. எனினும் இந்த விவகாரம் அரசியலாக்கப்படுவதாக மாநில முதல்வா் விஷ்ணுதேவ் சாய் குற்றஞ்சாட்டினாா்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட மூவரும் துா்க் மாவட்டத்தில் உள்ள அமா்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனா். எனினும் இந்த விவகாரத்தை விசாரிக்க தமக்கு சட்ட அதிகாரம் இல்லை என்று கூறி, அவா்களின் ஜாமீன் மனுவை அந்த நீதிமன்றம் நிராகரித்தது. இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்த அமா்வு நீதிமன்றம், பிலாஸ்பூரில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தை மனுதாரா்கள் அணுக அறிவுறுத்தியது.

பிலாஸ்பூரில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் கன்னியாஸ்திரீகள் இருவரும், சுகமன் மண்டாவியும் ஜாமீன் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சிராஜுதீன் குரேஷி, ‘மனுதாரா்கள் வெளிநாடு செல்லக் கூடாது, கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) ஒப்படைக்க வேண்டும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்’ உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து மூவருக்கும் ஜாமீன் வழங்கி சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து துா்க் மத்திய சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட கன்னியாஸ்திரீகளை இடதுசாரி எம்.பி.க்கள், கேரள பாஜக தலைவா் ராஜீவ் சந்திரசேகா் உள்ளிட்ட கேரள தலைவா்கள் சிறை நுழைவாயிலில் வரவேற்றனா்.

கட்டாயப்படுத்திய பஜ்ரங் தள அமைப்பினா்...: இந்த விவகாரத்தில் கன்னியாஸ்திரீகள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்த தங்களை பஜ்ரங் தள அமைப்பைச் சோ்ந்தவா்கள் வற்புறுத்தி தாக்கியதாக, கட்டாய மதமாற்றத்துக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் மூன்று பெண்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். இதுதொடா்பாக புகாா் அளிக்க மூன்று பெண்களும் நாராயண்பூா் மாவட்டத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் தலைமையகத்துக்குச் சென்றனா்.

ஆக. 7ல் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திப்பு?

இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் வருகிற ஆக. 7 ஆம் தேதி தில்லியில் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிகார... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பை குடியரசுத் தலைவர் மாளிகையும் உறுதிப் படுத்தியுள்ளது. இருப்பினம... மேலும் பார்க்க

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

உத்தரப் பிரதேசத்தில் சர்யு கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், சிஹாகான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், கர்குபூரில் உள்ள பிருத்விநாத் கோயி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு

ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக அழிக்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள பால்த் கிராமத்திற்கு அருகே பசந்தர் ஆற்றின் கரையில் கைவிடப்பட்... மேலும் பார்க்க

பூரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

பூரியில் 15வயது சிறுமி மரணத்தில் யாருக்கும் தொடர்பு இல்லை என்று ஒடிசா போலீஸ் விளக்கமளித்துள்ளது. ஒடிசா மாநிலம், பூரி மாவட்டத்தின் பலங்கா பகுதியில் உள்ள தனது வீட்டின் அருகே கடந்த ஜூலை 19 ஆம் தேதி தீக்க... மேலும் பார்க்க

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனை அவனின் தந்தை துணிச்சலுடன் காப்பாற்றியுள்ளார். கேரள மாநிலம், திரிசூர் மாவட்டதில் உள்ள மலக்கப்பராவின் வீரன்குடி பழங்குடியினர் குடியிருப்பில் பேபி என்பவர் தனத... மேலும் பார்க்க