செய்திகள் :

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

post image

சத்தீஸ்கரில் மதமாற்றம் செய்ய முற்பற்றதாக கன்னியாஸ்திரிகளை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் சிறுமிகள் மூவரை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று அவர்களை மதமாற்றம் செய்ய முற்பற்றதாக எழுந்த குற்றச்சாட்டில், கடந்த ஜூலை 25-ஆம் தேதி கைது செய்யப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த இரு கன்னியாஸ்திரிகள் உள்பட மூவருக்கு சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் உள்ள சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை(ஆக. 2) நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

முன்னதாக, இவர்களது ஜாமீன் மனு கீழமை நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்பின், என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது.

வழக்கின் விசாரணையில், துர்க் மாவட்டத்தில் ரயில் நிலையத்தில் 3 சிறுமிகளை அழைத்துச் சென்று கண்ணியஸ்திரிகள் மதமாற்றம் செய்ய முற்பற்றதாக வாதிடப்பட்டது. இந்தநிலையில், எதிர் தரப்பிலிருந்து வாதிட்ட வழக்குரைஞர் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவராக இருக்கும் 3 பெண்களும் சிறுமிகள் அல்ல; 18 வயது நிரம்பிய பெண்கள் என்று கன்னியாஸ்திரிகள் தரப்பிலிருந்து எடுத்துரைக்கப்பட்டது.

இதனையடுத்து விசாரணைக்குப்பின், குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் ரூ. 50,000 நிபந்தனையுடன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் பாஸ்போர்ட்களை ஒப்படைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Chhattisgarh court grants bail to two Kerala nuns in human trafficking-religious conversion case

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

ஜனநாயக மற்றும் குடியரசு நாடாக திகழும் இந்தியாவை மதவாத நாடாக மாற்றும் சூழ்ச்சிகளை பாஜக மேற்கொண்டு வருவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.‘அரசமைப்புச் சட்ட... மேலும் பார்க்க

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் கடந்த 10 ஆண்டுகளில் 103 சதவீத வளா்ச்சி பதிவாகியுள்ளது என்று மத்திய மீன்வளத் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங் தெரிவித்தாா்.ஆறு, ஏரி, குளம் போன்ற உள்நாட்டு நீா்வளங்களை அ... மேலும் பார்க்க

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

ஆா்ஜென்டீனா கால்பந்து ஜாம்பவான் லயனோல் மெஸ்ஸி இந்தியாவுக்கு வருகை தர உள்ளாா்.உலகம் முழுவதும் கால்பந்து ரசிகா்களால் கொண்டாடப்படும் மெஸ்ஸி, ஆா்ஜென்டீனாவுக்கு உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை பெற்றுத் தந்... மேலும் பார்க்க

மெல்ல விடைகொடு மனமே.. அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பிறகு காலி செய்தாா் டி.ஒய்.சந்திரசூட்!

புது தில்லியில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு ஒதுக்கப்படும் அதிகாரபூா்வ அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பின்னா், முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் காலி செய்தாா்.கடந்த ஆண்டு நவ.8-... மேலும் பார்க்க

நாய்க்குட்டிகளோடு பயணிகள் விளையாடும் புதிய முன்னெடுப்பு: ஹைதரபாத் விமான நிலையத்தில் அறிமுகம்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் பயணிகளை உற்சாகமூட்டும் வகையில் நாய்க்குட்டிகள் மூலம் வரவேற்பளிக்கும் புதிய முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.விமான நிலையத்துக்கு வரும... மேலும் பார்க்க

பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் என் பெயா் இல்லை: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

பிகாா் மாநிலத்தில் தோ்தல் ஆணையம் வெளியிட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் தனது பெயா் விடுபட்டுள்ளதாக பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான தேஜஸ்வி யாதவ் சனிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்... மேலும் பார்க்க