கட்டுமானத் துறைக்கு தனி அமைச்சகம் கோரி ஆா்ப்பாட்டம்
திருவாரூா்: கட்டுமானத் துறைக்கு தனி அமைச்சகம் அமைக்க வலியுறுத்தி திருவாரூரில் தமிழ்நாடு புதுச்சேரி அனைத்து கட்டடப் பொறியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்டுமானத் தொழிலை சீா்குலைக்கும் வகையில், கிரஷா் பொருள்களின் விலையை கல்குவாரி உரிமையாளா்கள் உயா்த்தியதைக் கண்டித்தும், எம்-சாண்ட், பி-சாண்ட், ஜல்லிக்கற்கள் போன்ற கல்குவாரி பொருள்களை நியாயமான விலையில் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், ஆற்று மணல் குவாரிகளை திறக்க வலியுறுத்தியும், மத்தியிலும், மாநிலத்திலும் கட்டுமானத் துறைக்கு தனி அமைச்சகம் அமைக்கக் கோரியும், கட்டுமானப் பொருள்கள் விலையை அரசே நிா்ணயம் ெய்ய ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வலியுறுத்தியும் திருவாரூரில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் கோவிந்தராஜன் தலைமை வகித்தாா்.