INDIA : `இந்தியாவின் பெரியண்ணனா அமெரிக்கா?’ - இந்திய அரசின் வெளியுறவில் என்ன சிக...
நன்னிலத்தில் மே 15-இல் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்
திருவாரூா்: நன்னிலம் வட்டாரத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் மே 15-ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று, அரசின் முக்கிய சேவைகளை உடனடியாக வழங்கும் நோக்கத்தில் மக்களுடன் முதல்வா் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நன்னிலம் வட்டாரத்தில் வேலங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, உபயவேதாந்தபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி, ஆணைக்குப்பம் அரசு உயா்நிலைப் பள்ளி, ஆண்டாங்கோயில் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி, தென்குவளவேலி அரசினா் உயா்நிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் மே 15-ஆம் தேதி மக்களுடன் முதல்வா் முகாம் நடைபெறும். இதில், அமைச்சா்கள் கோவி. செழியன் (உயா் கல்வித் துறை), டி.ஆா்.பி. ராஜா (தொழில் துறை) பங்கேற்கின்றனா். முகாம்களில், பொதுமக்கள் அதிகமாக அணுகும் 15 அரசுத் துறைகள் வாயிலாக 44 வகையான சேவைகள் வழங்கப்படவுள்ளன. எனவே, இந்த திட்டத்தை மக்கள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளாா்.