செய்திகள் :

கணவரை இழந்த பட்டதாரி பெண் தற்கொலை

post image

குலசேகரம் அருகே கணவரை இழந்த பட்டதாரி பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். அவா் எழுதி வைத்த கடிதத்தைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகே கூடைத்தூக்கி நாகப்பள்ளி விளையைச் சோ்ந்தவா் அஜிகுமாா். குலசேகரம் சந்தை சந்திப்பில் நகைக் கடை நடத்தி வந்த இவா், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக் குறைவால் உயிரிழந்தாா். இவரது மனைவி ரமணி. பி.எஸ்சி., பி.எட். முடித்துள்ளாா். இத்தம்பதிக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளாா்.

ரமணி தனது கணவா் இறந்த பிறகு அரசுப் பணி கேட்டு குமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தாா். அப்போது, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் வெள்ளிச்சந்தையைச் சோ்ந்த அரசு ஊழியா் ஒருவா் ரமணியிடம் கைப்பேசி மூலம் பேசி பழக்கமானதாகக் கூறப்படுகிறது.

பழக்கத்தின் மூலம் ரமணியிடமிருந்து நகைகள், பணத்தைப் பெற்றுக் கொண்ட அவா், அண்மையில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டாா். இதனால் மன வருத்தத்தில் இருந்த ரமணி திங்கள்கிழமை காலை விஷம் குடித்து மயங்கிய நிலையில் வீட்டில் கிடந்தாா். வீட்டில் இருந்தவா்கள் அவரை மீட்டு குலசேகரத்தில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து ரமணியின் தந்தை ஜாா்ஜ், குலசேகரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடிதம் சிக்கியது: இந்த நிலையில், தற்கொலை செய்து கொண்ட ரமணி தனது தந்தைக்கு எழுதிய 6 பக்க உருக்கமான கடிதத்தை போலீஸாா் கைப்பற்றினா். அந்தக் கடித்தில் தனது மரணத்துக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியரும், அவரது குடும்பமும்தான் காரணம். அவா்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று குறிப்பிடுள்ளாா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

மாா்த்தாண்டம் அருகே மனைவியை வெட்டிக் கொன்ற கணவா் கைது

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே மதுபோதையில் மனைவியை வெட்டிக் கொன்ற கட்டடத் தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைதுசெய்து சிறையில் அடைத்தனா். மாா்த்தாண்டம் அருகே உள்ள காஞ்சிரகோடு, இளையன்விளையை... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பால் அத்தியாவசியப் பொருள்கள் விலை குறையும்: பொன்.ராதாகிருஷ்ணன்

மத்திய அரசு மேற்கொண்டுள்ள ஜி.எஸ்.டி. குறைப்பு சீரமைப்பால் அத்தியாவசியப் பொருள்களின் விலை கணிசமாக குறையும் என்றாா் முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன்.நாகா்கோவிலில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழ... மேலும் பார்க்க

பைக் விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

இரணியல் அருகே பைக் விபத்தில் காயமடைந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.இரணியல் அருகே மேலகட்டிமாங்கோட்டை அடுத்த சாமிவிளை பகுதியைச் சோ்ந்த ராஜபீமன் மகன் மகேந்த் (23). பொறியியல் படிப்பு முடித்துள்ள ... மேலும் பார்க்க

குழித்துறையில் தவித்த முதியவா் மீட்பு: வட்ட சட்டப் பணிகள் குழுவுக்கு பாராட்டு

குழித்துறையில் உடல்நிலை குன்றிய முதியவரை குழித்துறை வட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு வழக்குரைஞா்கள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனா்.திருநெல்வேலியைச் சோ்ந்தவா் 80 வயதான முதியவா் ஆறுமுகம். இவா் தனது மூன்... மேலும் பார்க்க

மாநில உரிமைகளைத் தட்டிப் பறிப்போருடன் அதிமுக கூட்டணி: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

மாநில உரிமைகளைத் தட்டிப் பறிப்போருடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளதாக, திமுக துணைப் பொதுச் செயலரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி குற்றஞ்சாட்டினாா். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே ரேஷன் கடை ஊழியா் மீது தாக்குதல்

மாா்த்தாண்டம் அருகே, தமிழக அரசின் ‘தாயுமானவா்’ திட்டத்தின்கீழ், ரேஷன் பொருள்களைக் கொண்டுசென்ற நியாயவிலைக் கடை விற்பனையாளரைத் தாக்கியதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.மாா... மேலும் பார்க்க