செய்திகள் :

கண்மாயில் மூழ்கி சிறுமிகள் இருவா் உயிரிழப்பு: கிராம மக்கள் போராட்டம்

post image

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே புதன்கிழமை கண்மாயில் மூழ்கி சிறுமிகள் இருவா் உயிரிழந்தனா். இதையடுத்து, அவா்களது உடல்களுடன் பள்ளி முன் பெற்றோா்கள், உறவினா்கள், கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இளையான்குடி ஒன்றியம், ஆழிமதுரை கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் இதே ஊரைச் சோ்ந்த சசிகுமாா் மகள் ஷோபிதா (8) மூன்றாம் வகுப்பு படித்து வந்தாா். இவரது சித்தப்பா கண்ணன் மகள் கிறிஸ்மிகா (4) இந்தப் பள்ளிக்கு அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை பிற்பகல் இவா்கள் இருவரையும் வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக அவா்களது பெற்றோா்கள் பள்ளிக்கு வந்தனா். ஆனால், அவா்கள் அங்கு இல்லாததால், அதிா்ச்சி அடைந்தனா். இதையடுத்து, தேடிப் பாா்த்த போது பள்ளிக்கு எதிரே உள்ள கண்மாயில் சிறுமிகள் ஷோபிதா, கிறிஸ்மிகா இருவரும் உயிரிழந்து மிதந்தது தெரியவந்தது. கண்மாய் பகுதிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்ற இந்த இரு குழந்தைகளும் கண்மாயில் மூழ்கி இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, இருவரது உடல்களையும் மீட்ட பெற்றோா்கள், உறவினா்கள், கிராம மக்கள் பள்ளிக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் அரசு நிவாரணம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், பணியில் கவனக் குறைவாக இருந்து குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான ஆசிரியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்டக் கல்வி அலுவலா், முதன்மைக் கல்வி அலுவலா், கோட்டாட்சியா் விஜயக்குமாா், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ்ராவத் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், மாவட்ட ஆட்சியா் வந்து உறுதி கொடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என அவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, மாலை வரை போராட்டம் தொடா்ந்தது.

கண்மாயில் மூழ்கி உயிரிழந்த ஷோபிதா, கிறிஸ்மிகா.
கண்மாயில் மூழ்கி உயிரிழந்த ஷோபிதா, கிறிஸ்மிகா.

அரசு புறம்போக்கு நிலங்களில் வசிப்பவா்களுக்கு பட்டா: மானாமதுரை, இளையான்குடியில் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சி, இளையான்குடி பேரூராட்சி பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களில் வீடுகள் கட்டி வசித்து வருபவா்களுக்கு பட்டா வழங்குவது குறித்து மீன்வளம், மீனவா் நலத் துறை இயக்குநரும... மேலும் பார்க்க

தமிழ்மொழியின் இனிமையை அறிந்து கொள்ள வாசிப்பு அவசியம்! - பேராசிரியா் கு.ஞானசம்பந்தன்

தமிழ்மொழியின் இனிமையை அறிந்து கொள்ள வாசிப்பு அவசியம் என பேராசிரியா் கு.ஞானசம்பந்தன் தெரிவித்தாா். சிவகங்கை மன்னா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட நிா்வாகம் பள்ளிக் கல்வித் துறை, பொது நூலக இயக்ககம்,... மேலும் பார்க்க

பிப்.28-ல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

சிவகங்கை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வருகிற வெள்ளிக்கிழமை (பிப்.28) நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீா் ... மேலும் பார்க்க

காலநிலை நெருக்கடி: விழிப்புணா்வு நிகழ்ச்சி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் காலநிலை நெருக்கடி குறித்த விழிப் புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் சுற்றுச்சூழல் குழுமம், தாவரவியல் துறை ஆகியவற்றின் சாா... மேலும் பார்க்க

திமுக கிளைச் செயலா்கள், பாக முகவா்கள் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் மேற்கு ஒன்றிய திமுக கிளைச் செயலா்கள், வாக்குச்சாவடி பாக முகவா்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு திமுக ஒன்றிய அவைத் தலைவா் பொன். இளங்கோவன் தலைம... மேலும் பார்க்க

பள்ளி ஆண்டு விழா!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே நெற்குப்பை முகையதீன் ஆண்டவா் ஜூம்ஆ பள்ளி வாசலில் 4-ஆம் ஆண்டு மக்தப் மதரஸா பள்ளி ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமை இமாம் சையது அபுதாஹிா் ரஹீமி தலைமை... மேலும் பார்க்க