மகளைப் பற்றி தவறான பேச்சுகள்.. டென்னிஸ் வீராங்கனை ராதிகா கொலையில் வெளியான தகவல்!
கதாநாயகனான இன்ஸ்டா பிரபலம் சதீஷ்குமார்!
இன்ஸ்டா பிரபலம் சதீஷ்குமார் தற்போது டாட்டூ எனும் புதிய படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
இன்ஸ்டாகிராம், யூடியூப்பில் கணவன் மனைவியாக நகைச்சுவை விடியோக்களை பதிவிட்டு பிரபலமானவர் சதீஷ் தீபா எனும் சதீஷ்குமார்.

சதீஷ் தனது மனைவி தீபாவுடன் சேர்ந்து பதிவிட்ட நகைச்சுவை விடியோக்களுக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் ஏராளமாக இருக்கிறார்கள்.
யூடியூப்பில் 30 லட்சத்தும் அதிகமானோரும் இன்ஸ்டா, முகநூலில் 10 லட்சத்துக்கும் அதிகமானோரும் பின் தொடர்கிறார்கள்.
சமீபத்தில், சில தமிழ்ப் படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விஷால் இவருடன் சேர்ந்து ரீல்ஸ் பதிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அறிமுக இயக்குநர் வேணு தேவராஜ் இயக்கத்தில் டாட்டூ என்ற படத்தில் நடித்துள்ளார். ரெஞ்சு, சஞ்சு இந்தப் படத்தைத் தயாரிக்க, பாப் அப் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை வழங்குகிறது.
இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் சதீஷ் குமார் கூறியதாவது:
கனவு நனவானது. என்னுடைய முதல் அறிமுக படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. நண்பர்களுடன் இதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு என் வாழ்க்கையில் முக்கியமான நாள் இது. இந்தப் படம் மனதுக்கு நெருக்கமானது. படத்தின் தொடக்கத்தில் ஸ்கிரிப்பிட்டில் வேலை செய்ததில் இருந்து நான் எவ்வளவு ஆர்வமாக இருந்தேன் எனத் தெரிந்தது.
சாதாரண மனிதனிலிருந்து யூடியூபர், இன்ப்ளூயன்சராகி தற்போது ஒரு படத்தில் நாயகனாகுவது எனது கனவாகும். அது தற்போது நனவாகிவிட்டது.
இந்தப் போஸ்டர் என் சாதனைகளின் பிரதிபலன். இந்தப் படத்துக்கு உங்களது ஆதரவை எதிர்பார்க்கிறேன். நீங்கள் இல்லாமல் நான் இல்லை. நம்பிக்கை வைத்த இயக்குநருக்கு நன்றி. நாம் நிறைய படங்கள் பணியாற்ற வேண்டும் என்றார்.