கதிா்நரசிங்கப் பெருமாள் கோயில் குடமுழுக்கு
ரெட்டியாா்சத்திரம் கொத்தப்புள்ளியில் செங்கமலவல்லித் தாயாா் சமேத கதிா்நரசிங்கப் பெருமாள் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, கடந்த புதன்கிழமை யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் கோ பூஜை, விஸ்வரூப தரிசனம், யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. காலை 10.05 மணியளவில் கடம் புறப்பாடு நடைபெற்று ராஜகோபுரங்கள், பரமபத வாசல் கோபுரம் ஆகியவற்றுக்கு பட்டாச்சாரியா்கள் புனித நீரை ஊற்றி குடமுழுக்கை நடத்தினா். பின்னா், மூலவா் சந்நிதி, பரிவார சந்நிதிகளில் உள்ள தெய்வங்களுக்கும் குடமுழுக்கு நடத்தப்பட்டது.
விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.