கந்திலி ஒன்றியத்தில் ரூ.31.56 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடைகள் திறப்பு
கந்திலி ஒன்றியத்தில் ரூ.31.56 லட்சத்தில் 3 புதிய நியாயவிலைக் கடைகளின் கட்டடங்களை எம்எல்ஏ அ.நல்லதம்பி திறந்து வைத்தாா்.
கந்திலி ஒன்றியம், ஆதிசக்தி நகா் பகுதியில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியில் ரு.5 லட்சத்திலும், ஆதியூா் பகுதியில் மாவட்ட பொது நிதியிலிருந்து ரு.13 லட்சத்திலும், சு.பள்ளிப்பட்டு பகுதி என 3 புதிய புதிய நியாயவிலைக் கடைகளுக்கு கட்டடங்கள் கட்டப்பட்டன.
புதிய கடைகளை திருப்பத்தூா் எம்எல்ஏ அ.நல்லதம்பி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் வட்ட வழங்கல் அலுவலா் முரளி கிருஷ்ணன், தா்மேந்திரன், ஒன்றிய செயலாளா்கள் குணசேகரன், மோகன்ராஜ், ஒன்றியக்குழு தலைவா் திருமதி திருமுருகன், துணைத் தலைவா் ஜி.மோகன்குமாா், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் தசரதன், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் பழனிவேல் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.