அண்ணா நினைவு நாள்: சென்னையில் நாளை (பிப்.03) போக்குவரத்து மாற்றம்
கனடாவில் அமெரிக்க பொருள்களுக்கு 25% வரி: ஜஸ்டின் ட்ரூடோ பதிலடி!
குறிப்பிட்ட சில அமெரிக்க பொருள்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கைக்கு கனடா பதிலடி கொடுக்கும் வகையில் 155 பில்லியன் கனேடிய டாலர் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்க்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
முதல் சுற்றாக 30 பில்லியன் கனேடிய டாலர் மதிப்புள்ள அமெரிக்க பொருள்களுக்கு வரி விதிப்பானது செவ்வாய்கிழமைமுதல் அமல்படுத்தப்படும். அதைத் தொடர்ந்து மூன்று வாரங்களில் 125 பில்லியன் கனேடிய டாலர் மதிப்புள்ள பொருள்கள் மீது இந்த புதிய வரி விதிப்பு அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
"நிச்சையமாக நாங்கள் அதிகரிக்க நினைக்கவில்லை. ஆனால் நாங்கள் கனடாவுக்காகவும் கனடா மக்களின் வேலைவாய்ப்புக்காகவும் துணை நிற்கிறோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: கனடா, மெக்சிகோ, சீனாவுக்கு புதிய வரி: டிரம்ப் அதிரடி!
இந்த புதிய வரி விதிப்பானது அன்றாடப் பொருள்களான, அமெரிக்க பீர், ஒயின், பழங்கள், காய்கறிகள், நுகர்வோர் சாதனங்கள், மரக்கட்டை, பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருள்களுக்கு பொருந்தும் என்று மேலும் அவர் கூறினார்.
கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீத வரியும், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத வரியும் விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னதாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, சில மணி நேரங்களுக்குப் பிறகு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த புதிய வரி விதிப்பை அறிவித்தார்.