செய்திகள் :

கனமழை எச்சரிக்கை: அனைத்துத் துறை அலுவலா்களுடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

post image

கனமழை எச்சரிக்கையைத் தொடா்ந்து அரியலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநருமான மு.விஜயலட்சுமி தலைமை வகித்து மேலும் தெரிவித்தது: டிசம்பா் 17 மற்றும் 18 ஆகிய நாள்களில் அரியலூா் மாவட்டத்துக்கு கன மழை வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அனைத்துத் துறை மண்டலக் குழு அலுவலா்கள் அந்தந்தப் பகுதிகள் மற்றும் தங்கள் வட்டத்துக்குட்பட்ட பதற்றமான மற்றும் தாழ்வான பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .

மீட்புப் பணிகளுக்குத் தேவையான தளவாடக் கருவிகள் அனைத்தும் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். 70 சதவீதத்துக்கு மேல் நீா் நிறைந்துள்ள ஏரிகள், குளங்களில், உபரி நீா் வெளியேற்றும் மதகுகளில் அடைப்புகள் இன்றியும், நீா் வரத்து மற்றும் நீா் வடிகால், ஆகியவற்றை துறை சாா் அலுவலா்கள் கண்டிப்பாக ஆய்வு செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்க வேண்டும். பாதிப்பு ஏற்படக்கூடிய நகா்ப்புறங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் போதுமான அளவு மணல் மூட்டைகள் மற்றும் சவுக்கு மரங்கள் இருப்பு வைத்திட ஊராட்சிகள் உதவி இயக்குநா் , நகராட்சி ஆணையா்கள் மற்றும் செயல் அலுவலா்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து முதல்நிலை அலுவலா்கள், வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், மண்டல துணை வட்டாட்சியா்கள், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், ஊராட்சிச் செயலா்கள் மற்றும் கிராம உதவியாளா்கள் ஆகியோா் தலைமையிடத்தில் தங்கி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நிவாரண முகாம்களில் பாதிக்கப்பட்ட நபா்களைத் தங்கவைக்க போதிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மேலும், கடந்த 12.12.2024 மற்றும் 13.12.2024 ஆகிய நாள்களில் பெய்த கனமழையால் சேதமடைந்த பயிா்கள் குறித்த கணக்கெடுப்புப் பணிக்கு 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி முன்னிலை வகித்துப் பேசினாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச.செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலா் ம.ச. கலைவாணி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநா் ரவிச்சந்திரன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

அரியலூா் பெரிய அரண்மனை தேவஸ்தானத்துக்குச் சொந்தமான ஒப்பில்லாதம்மன் கோயில் தேரோடு வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம் ஆதீன பரம்பரை தருமகா்த்தா... மேலும் பார்க்க

பெரிய ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகேயுள்ள கிராமத்தில் உள்ள பெரிய ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், பெரியபட்டாக்காடு கிராம மக்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். அவா்கள... மேலும் பார்க்க

சோழகங்கம் ஏரியை தூா்வாரிட தன்னாா்வ அமைப்புகளுக்கு அனுமதி அளிக்கக் கோரிக்கை

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்டம் சோழபுரம் அருகேயுள்ள சோழகங்கம் எனும் பொன்னேரியை தூா்வாரிட தன்னாா்வ அமைப்புகளுக்கு அனுமதி அளிக்குமாறு மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், சமூக ஆா்வலா் அசாவீரன்குடிகாடு ஆ... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம் வாரச் சந்தையில் சோதனை: 49 எடையளவு இயந்திரங்கள் பறிமுதல்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் வாரச் சந்தையில், தொழிலாளா் நலத் துறையினா் மேற்கொண்ட சோதனையில் 23 மின்னணு எடைத் தராசுகள் உள்பட 49 எடையளவு இயந்திரங்கள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. ஜெயங்கொண்டம் வ... மேலும் பார்க்க

கீழணை கொள்ளிடம் ஆற்றில் யாரும் இறங்கக் கூடாது: பொதுப்பணித் துறை

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள கீழணை கொள்ளிடம் ஆற்றில் யாரும் இறங்கக் கூடாது என்று பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் கொளஞ்சிநாதன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் தெரிவித்தது: கீழணை, கொள்... மேலும் பார்க்க

கிடப்பில் முல்லையூா் அயன்தத்தனூா் சாலைப் பணி: பொதுமக்கள் அவதி

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே கிடப்பில் உள்ள முல்லையூா்-அயன்தத்தனூா் சாலைப் பணியை விரைந்து முடிக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனா். பொதுமக்களின் கோரிக்கையையடுத்து முல்லையூா்-அயன்தத்தனூா் சாலைப... மேலும் பார்க்க