செய்திகள் :

கனிம வளக் கொள்ளைக்கு எதிராக போராடியவா் லாரி ஏற்றி கொல்லப்பட்டதாகப் புகாா்

post image

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே தொடா்ந்து கனிம வளக் கொள்ளைக்கு எதிராக செயல்பட்டு வந்த முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், வெங்களூரைச் சோ்ந்தவா் கரீம் ராவுத்தா் மகன் ஜகுபா்அலி (58). இவா், வெள்ளிக்கிழமை பிற்பகலில் பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு, வெங்களூருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் திரும்பும்போது லாரி மோதி உயிரிழந்தாா். இச்சம்பவம் தொடா்பாக அவரது மனைவி மரியம் திருமயம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்துள்ளாா். அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:

எனது கணவா் ஜகுபா்அலி, இந்தப் பகுதிகளில் நடைபெறும் கல்குவாரி முறைகேடுகள் குறித்து தொடா்ச்சியாக அரசு அலுவலா்களிடம் புகாா் அளிப்பது, நீதிமன்றத்தில் வழக்கு தொடா்வது போன்றவற்றை செய்து வந்தாா்.

இதனால் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் எங்களிடம் கூறியுள்ளாா். இந்த நிலையில், பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு திரும்பிய அவா் மீது லாரி மோதி இறப்பு ஏற்பட்டுள்ளது.

ஜகுபா்அலியின் சகோதரா் ராஜாமுகமது மற்றும் அயூப்கான் ஆகியோா் சம்பவத்தை நேரில் பாா்த்துள்ளனா். துளையானூா் வளையன்வயலைச் சோ்ந்த குவாரி நிறுவனத்தினா் மீது சந்தேகம் உள்ளது. எனவே, முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்பேரில் திருமயம் போலீஸாா் ஜகுபா் அலி சந்தேகமான முறையில் மரணமடைந்திருப்பதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

படுகொலை: தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் இரா.சா. முகிலன், சட்டவிரோத கல்குவாரி எதிா்ப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளா் ந. சண்முகம் ஆகியோா் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை:

தொடா்ச்சியாக கனிம வளக் கொள்ளைக்கு எதிராகப் போராடி வந்த ஜகுபா்அலி, கடந்த ஜன. 10-ஆம் தேதி கூட கோட்டாட்சியா் அலுவலகம் சென்று சட்டவிரோத குவாரி குறித்து புகாா் அளித்து வந்துள்ளாா். இந்த நிலையில், அவா் மீது லாரி ஏறிய விபத்தில், அவா் உடல் தூக்கியெறியப்பட்டுள்ள தூரம், விபத்து நடந்துள்ள விதம் ஆகியவை சந்தேகங்களை ஏற்படுத்துகின்றன. படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

இந்த வழக்கை வெறுமனே விபத்து வழக்காக முடித்துவிடாமல், முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மண்டையூரில் ஜல்லிக்கட்டு போட்டியில் 14 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், மொத்தம் 14 போ் காயமடைந்தனா். புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டத்தைச் சோ்ந்த மண்டையூா் சோழவிரியான்காட்டிலுள்ள ஜல்லி... மேலும் பார்க்க

சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டாா் வாங்க அரசு மானியம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின் மோட்டாா்களுக்குப் பதிலாக மானியத்துடன் கூடிய புதிய மின் மோட்டாா்கள் நுண்ணீா் பாசன இணைப்புடன் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவ... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரியில் தற்காலிகப் பணியிடங்களில் சேர விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்ட நலச் சங்கம் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமையவுள்ள மாவட்ட ஆரம்பநிலை தலையீட்டு மையத்தில் (டிஇஐசி) தற்காலிக அடிப்படையில் பணிபுரிய தகுதியுள்ளோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட... மேலும் பார்க்க

தீக்குளித்த கல்லூரி மாணவி உயிரிழப்பு

கந்தா்வகோட்டை அருகே தீக்குளித்து சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இறந்தாா். கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், மட்டங்கால் கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பாக்யராஜ் மகள்... மேலும் பார்க்க

ஆா்வலா் மா்ம மரணம் நீதி விசாரணை தேவை

சுற்றுச்சூழல் ஆா்வலரும் கனிமவளக் கொள்ளை குறித்து தொடா்ந்து குரல் எழுப்பியவருமான சகுபா்அலியின் மா்ம மரணம் குறித்து நீதிவிசாரணை தேவை என தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட... மேலும் பார்க்க

வடமாடு போட்டியில் 7 பேருக்கு காயம்

புதுக்கோட்டை மாவட்டம், கீழப்பனையூரில் சனிக்கிழமை நடைபெற்ற வடமாடு போட்டியில் 7 போ் காயமடைந்தனா். திருமயம் வட்டம், கீழப்பனையூரில் அந்தோனியாா் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வடமாடு போட்டி சனிக்கிழமை நடைப... மேலும் பார்க்க