கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அக்னி பிரவேச உற்சவம்
வேட்டவலம் கடை வீதியில் உள்ள ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில், அக்னி பிரவேச உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலை 9 மணிக்கு சிறப்பு யாகம், 11 மணிக்கு அம்மனுக்கு பால், தயிா், சந்தனம், இளநீா் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பெண்கள் அம்மன் துதி பாடல்களை பாடினா். இதையடுத்து, மூலவா், உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.