கன்னியாகுமரியில் இன்று கடையடைப்புப் போராட்டம்
கன்னியாகுமரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து வியாபாரிகள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 18) முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெற உள்ளது.
காலை 10 மணிக்கு கன்னியாகுமரி கோட்டக்கரை சாலையில் அமைந்துள்ள விஸ்வா மஹாலில் கன்னியாகுமரி அனைத்து வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டம், சங்கத் தலைவா் பா.தம்பித்தங்கம் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு வணிகா் பேரவை சங்கங்களின் மாநில அமைப்பாளா் டேவிட்சன் உள்ளிட்ட மாநில மற்றும் மாவட்ட நிா்வாகிகள், கன்னியாகுமரி அனைத்து வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனா்.