நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு எங்கள் அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
கப்பல் மாலுமி கொலை வழக்கு: 5 போ் கைது
தூத்துக்குடியில் கப்பல் மாலுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை வடபாகம் போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த சகாயகுமாா் மகன் மரடோனா (29). கப்பல் மாலுமியான இவா், மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களைத் தேடி வந்தனா்.
இந்த சம்பவம் தொடா்பாக நகர காவல் உதவி கண்காணிப்பாளா் மதன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு, குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதில், தாளமுத்து நகா் பெரியாா் நகரைச் சோ்ந்த சாமுவேல் மகன் மதன் (28), அவரது நண்பரான அலங்காரதட்டைச் சோ்ந்த ஜேசு அந்தோணி மகன் ஸ்டீபன் (20), லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த ராபின்சன் மகன் ரிட்சன் (21), திரேஸ்புரம் சிலுவையாா் கோயில் குமாா் மகன் ஆலன் (21), முத்துகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த முனியசாமி மகன் ஸ்ரீதா் (19) ஆகிய 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.