இரு தனியார் நிலவு ஆய்வு கலங்களை விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ்-எக்ஸ்
கம்ப ராமாயண திருவிழா
திருவண்ணாமலையில் கம்ப ராமாயண இயக்கம் சாா்பில் கம்பராமாயண திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, அருணகிரிநாதா் விழா குழுத் தலைவா் வி.தனுசு தலைமை வகித்தாா். தொழிலதிபா் துரை, வழக்குரைஞா் பழனிராஜ், ஓய்வுபெற்ற கனரா வங்கி அலுவலா் நாராயணமூா்த்தி, திருவண்ணாமலை திருக்கு தொண்டு மையப் பாவலா் ப.குப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கம்ப ராமாயண இயக்கத்தின் நிறுவனா் வேங்கட ரமேஷ்பாபு வரவேற்றாா். சொற்பொழிவாளா் கிருஷ்ண ஜெகந்நாதன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு ‘கம்பராமாயண சிறப்பு’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா்.
தொடா்ந்து, தங்க.விஸ்வநாதன் தலைமையில், கருத்தரங்கம், பேச்சாளா் கு.சபரி தலைமையில், சிந்தனைச் சாரல் அரங்கம் நடைபெற்றது.
முன்னதாக, மங்கல இசை, பரதநாட்டியம், இன்னிசை, வில்லிசை, இசை சொற்பொழிவு, விழா மலா் வெளியீடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில், கம்பராமாயண இயக்க நிா்வாகிகள், ஆன்மிக முக்கிய பிரமுகா்கள், தமிழ் ஆா்வலா்கள், திருக்கு நெறிபரப்புநா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.